
சுற்றுச்சூழல்
இருக்கும் சிக்கல்கள்
-
கேரள கழிவுகளை தமிழ்நாட்டில் கொட்டும் அவலம்
-
கன்னியாகுமரி மலைகள் அழிப்பு
-
அனுமதிக்கு மேல் மணல் குவாரி, கல் குவாரி செயல்பாடு, விரைவில் முடப்படு வேண்டும்
-
ஏரிகள் இன்னும் சரியாக தூற்வாரப்பட்டு சுற்று சுவரில் கற்களை வைத்து சமன்படுத்தி கரையை பலப்படுத்த வேண்டும்
-
செய்யாறு சிப்காட் விரிவாக்கம்
-
கிருஷ்ணகிரி ராயக்கோட்டை அருகிலுள்ள பல மலைகள் கொஞ்சம் கொஞ்சமாக வெடி வைத்து சம நிலமாக மாற்றி தனியார் தொழில் நிறுவனங்களுக்கு கொடுத்தல்
2021-25
தமிழ்நாடு பிரச்சனைகளின் பட்டியல்
-
எண்ணூர் மற்றும் மணலி பாகத்தில் விஷவாயு கசிவு ஏற்பட்டு, காற்று மாசு அதிகமாய் உள்ளது (15-பிப்-24)
-
புதுச்சேரியில் மீண்டும் விஷவாயு வெளியேறியதாக பொதுமக்கள் தங்களின் வீடுகளை விட்டு வெளியேறி சாலைமறியல் செய்து வருகின்றனர். இதனால் புதுச்சேரி - விழுப்புரம் சாலையில் மக்கள் போராட்டம் (14-சூலை-24)
-
குன்றத்தூர் அடுத்த சிக்கராயபுரத்தில் உள்ள கல்குவாரி தண்ணீரில் மருத்துவ கழிவுகள் கொட்டப்படுவதால் சுகாதாரக் கேடு ஏற்படுவதாக சமூக ஆர்வலர்கள் கூட்டம் சாட்டியுள்ளனர் (14-செப்-24)
-
கன்னியாகுமரியில் அணுக்கணிம சுரங்கம் அமைக்க மத்திய அரசு திட்டம் (19-செப்-24)
-
தஞ்சை அருகே செயல்பட்டு வரும் தார் தொழிற்சாலையால் மூச்சு விடுவதற்கு கூட சிரமப்படும் பொதுமக்கள். வீடு முழுதும் தூசி ஆகி ஆஸ்துமாவில் வரும் அபாயம் உள்ளதாக வேதனை (01-அக்-24)
-
குமரி மாவட்டத்தில் IREL மணல் ஆலைக்கு அணு கனிம சுரங்க அமைக்க மத்திய மாநில அரசுகள் அனுமதி வழங்கிய நிலையில் இதற்கு எதிர்ப்பு தெரிவித்து நீரோடி முதல் ஆரோக்கிய புறம் வரையிலான கடற்கரை கிராமகங்களில் மனித சங்கிலி போராட்டம் நடைபெற்றது (20-அக்-24)
-
சென்னை திருநீர்மலை நாட்டு கால்வாயில் காலவதியான ஆவின் பால் பாக்கெட் கொட்டப்பட்டுள்ளன, இதனால் தாம்பரம் மாநாட்டுக்கு உட்பட்ட வீரராகவன் ஏரின் உபரி நீர் சென்று அடையார் ஆற்றில் கலக்கிறது இதனிடையே இந்த நாட்டு கால்வாயில் கழிவுநீர் இறைச்சி கழிவுகள் கலக்கப்படுவதாக குற்றச்சாட்டு ஏற்பட்டு வருகிறது (25-அக்-24)
-
திருவெற்றியூர் தனியார் பள்ளி ஆய்வகத்தில் ரசாயன வாய்வு கசிவு காரணமாக மயக்கம் அடைந்த 35க்கும் மேற்பட்ட மாணவ, மாணவிகளுக்கு மருத்துவமனையில் சிகிச்சை, இதனால் பள்ளியில் பெற்றோர்கள் வாக்குவாதம் (25-அக்-24)
-
மேலூர் அருகே அரிட்டாப்பட்டி சுற்றியுள்ள பகுதியில் டங்ஸ்டன் சுரங்கங்கள் அமைக்க எதிர்ப்புகள் எழுந்துள்ள நிலையில் சுரங்கம் தோன்றுவதாக குறியீடுகள் போடப்பட்டுள்ளதாக கிராம மக்கள் அச்சம் தெரிவித்துள்ளனர் (07-டிச-24)
-
ஆம்பூர் அருகே பாலாற்றில் தோல் கழிவினை தடுக்க கோரி நுரை பொங்கி ஓடும் பாலாற்றில் இறங்கி பொதுமக்கள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டதால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது (13-டிச-24)
-
கேரளா மாநிலத்தில் உள்ள புற்றுநோய் மருத்துவமனை கழிவுகள் மற்றும் மருந்து பொருட்களை மூட்டை மூட்டையாக லாரிகளில் கொண்டுவந்து திருநெல்வேலி அருகே கொட்டி சென்றுள்ளனர் (17-டிச-24)
-
கடலில் ஏற்படும் மாற்றங்கள் பல பேரிடர்கள் உலகம் முழுவதும் தந்து கொண்டிருக்கிறது இந்த மாற்றங்களின் அறிகுறிகள் கடலூர் வெள்ளி கடற்கரையிலும் எதிரொலிக்க தொடங்கிவிட்டது சென்னை மெரினாவுக்கு அடுத்தபடியான மிகப்பெரிய மணல் பரப்பு கொண்ட கடலூர் வெள்ளிக் கடற்கரையில் நீண்ட தூரம் நடந்து சென்றால்தான் கடல் நீரில் கால் வைக்க முடியும் அந்த அளவு மணல் பரப்பு மிகப்பெரிய அளவில் இருந்தது, 2004 ஏற்பட்ட சுனாமிக்கு பிறகு அந்த மணல் பரப்பு கொஞ்சம் கொஞ்சமாக சுருங்கி தற்போது கடல் தின்று போட்ட மிச்சம் தான் அங்கே கிடைக்கிறது அதுவும் இன்னும் சில காலங்களில் காணாமல் போகும் என தேவானம் பட்டினம் பகுதியை சேர்ந்த மீனவர்கள் கவலை தெரிவிக்கிறார்கள் (01-சன-25)
-
கிருஷ்ணகிரி மாவட்டம் போச்சம்பள்ளி அடுத்த சிப்காட்டில் தனியார் அட்டை தயாரிப்பு தொழில் நிறுவனம் இயங்கி வருகிறது, இதில் நாள் ஒன்றுக்கு இரண்டு லட்சம் லிட்டர் தண்ணீரை வெளியேற்றும் கழிவுகள் சிப்காட்டில் உள்ள குட்டையில் தேக்கப்படுவதால் நோய் தொற்று ஏற்படுவதாகும் விவசாயம் பாதிக்கப்படுவதாகவும் 3 கிலோமீட்டர் சுற்றளவுக்கு பாதிப்பு என்று குற்றம் சாடினார்கள் (18-சன-25)
-
நெல்லை மதவகுறிச்சி என்ற இடத்தில் குவியல் குயிலாக கொட்டப்பட மருத்துவக் கழிவுகள், காலாவதியான மருந்துகள் மற்றும் மாத்திரைகள் கொட்டி எரிப்பு, நோயாளிகள் பயன்படுத்தப்பட்ட உள்ளிட்ட பொருட்கள் தீ வைத்து எரிப்பு (29-மார்-25)
-
நெல்லை மதவகுறிச்சி என்ற இடத்தில் குவியல் குயிலாக கொட்டப்பட மருத்துவக் கழிவுகள், காலாவதியான மருந்துகள் மற்றும் மாத்திரைகள் கொட்டி எரிப்பு, நோயாளிகள் பயன்படுத்தப்பட்ட உள்ளிட்ட பொருட்கள் தீ வைத்து எரிப்பு (29-மார்-25)
-
செங்கல்பட்டு பாலாற்று கரையோரம் காலாவதியான மாத்திரை மருந்து உள்ளிட்ட மருத்துவ பொருட்கள் மார்பு நபர்கள் கொட்டி உள்ளனர். இதனால் சுகாதாரக் கேரி ஏற்படும் அபாயம் உள்ளதாக பொதுமக்கள் அச்சம் அடைந்துள்ளனர் (22-ஏப்-25)




