top of page
newslaundry_2020-03_8d8709c3-450e-4bdd-aaee-182d9e583a29_dalit_oppression.webp

சாதி வன்கொடுமைகள்

இருக்கும் சிக்கல்கள்

  1. தமிழ்நாட்டில் எஸ்சி, எஸ்டி மக்களுக்கு எதிரான குற்றங்கள் அதிகரித்துள்ளதாக நிதி ஆயோக் வெளியிட்டுள்ள SDG Index அறிக்கையில் தகவல்

  2. சாதி சண்டைகள், கொலைகள் அதிகரிப்பு

2021-25 
தமிழ்நாடு பிரச்சனைகளின் பட்டியல் 

  1. வேங்கைவயலின் நீர் தொட்டியில் மலம் கழிப்பு பிரச்சனை(08-ஜன-24)

  2. 17 வயது தலித் மாணவர் சின்னதுரை மற்றும் அவரது சகோதரி 13 வயது சகோதரி சந்திரசெல்வி ஆகியோர் சாதி வன்கொடுமைக்கு ஆளானார்கள்(17-ஆக-23)

  3. தாராபுரம் அரசு பள்ளியில் தலைமை ஆசிரியர்கள் இரண்டு மாணவிகளை கழிப்பறைகளை சுத்தம் செய்ய வைத்தல்(24-ஏப்-24)

  4. திருவள்ளூர் கும்முடிபூண்டி அருகே கோயிலில் பட்டியலின மக்கள் வழிபாடு செய்வதில் ஏற்பட்ட பிரச்சனை தொடர்பாக பெண் ஊராட்சி மன்றத் தலைவர் உள்பட ஏழு பேர் மீது வன்கொடுமை தடுப்புச் சட்டம் உள்ளிட்ட ஏழு பிரிவுகளில் வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது (13-ஆக-24)

  5. தமிழகத்தில் சாதிய வன்கொடுமைகள் அதிகமாக நடக்கும் மாவட்டங்களில் டாப் 10 பட்டியலில் மதுரை தொடர்ந்து முதல் இடத்தில் உள்ளது (26-செப்-24)

  6. விழுப்புரம் மாவட்டம் செஞ்சி அருகே பழங்குடியின பெண் ஊராட்சி மன்ற தலைவரை ஊராட்சி மன்ற துணைத் தலைவரின் கணவர் பணிசை விடாமல் தடுப்பதாக புகார்கள் எழுந்துள்ளனர் (06-அக்-24)

  7. திண்டுக்கல் தருமத்து பட்டியலில், மயானத்துக்கு செல்லும் பொது பாதையை தனிநபர் ஒருவர் அடைத்ததாக கூறி நூற்றுக்கு மேல் கட்ட குறிப்பிட்ட சமூக மக்கள் சாலை மறியல் போராட்டம் நடத்தினர் (11-அக்-24)

  8. மதுரை மாவட்டம் உசிலம்பட்டி அருகே பட்டியலின மக்களே புறக்கணித்துவிட்டு ஊர் திருவிழாவை நடத்த திட்டமிட்டு இருப்பது எதிர்ப்பு எழுந்துள்ளது (13-அக்-24)

  9. உலகப் புகழ்பெற்ற மதுரை பாலமேடு ஜல்லிக்கட்டில் ஜாதி பாகுபாடு குற்றச்சாட்டு எழுந்துள்ளது. தலித் சமூகத்தினர் தங்களது கோயில் காளை ஜல்லிக்கட்டில் பங்கேற்க அனுமதிக்கப்படாததால் கடும் அதிருப்தியில் உள்ளனர். இதனால், பாலமேடு கிராமத்தில் தலித்துகள் வீடுகளில் கருப்பு கொடிகள் ஏற்றப்பட்டுள்ளன.

  10. அலங்காநல்லூர் வலசை ஒத்த வீடு மற்றும் குறவன் குளம் ஆகிய கிராமங்களை சேர்ந்த காளைகளுக்கு 900க்கு மேற்பட்ட எண்களில் டோக்கன் வழங்கப்பட்டது, அதிகபட்சமாக 800 காளைகளை மட்டுமே அவிழ்த்து விட முடியும் என்று இதனால் தங்கள் கிராமலே சேர்ந்த காளைகளை போட்டியில் பங்கேற்க முடியாத நிலை ஏற்பட்டதால் மக்கள் போராடினார்கள் (16-சன-25)

  11. உசிலம்பட்டியில் 17 வயது பட்டியல சிறுவனை ஆறு வயது மாற்று சமூக சிறுவனின் காலில் விழ வைத்த கொடூரம் ஆறு பேர் மீது வன்கொடுமை தடுப்பு சட்டத்தின் கீழ் வழக்கு பதிவு (19-சன-25)

  12. புதுக்கோட்டை மாவட்டம் வேங்கை வேலு விவகாரத்தில் குற்றவாளிகள் என அதே கிராமத்தைச் சேர்ந்த பட்டியல இளைஞர் 3 பேரை நேற்று சிபிசிஐடி போலீசா தமிழக அரசு வழக்கறிஞர் மூலம் அறிவித்தனர் இதைத் தொடர்ந்து அந்த கிராமத்த மக்கள் போராடினர் (25-சன-25)

  13. வேங்கை வயலில் சிபிசிஐடி தாக்கல் செய்துள்ள குற்ற பத்திரிகையில் முதல் குற்றவாளியாக காட்டியுள்ள காவலர் முரளி ராஜாவின் பாட்டி உயிரிழந்த நிலையில் அவருடைய இறப்பிற்கு வெளியே ஆட்களை அனுமதிக்கவில்லை என உறவினர்கள், மறைந்த மூதாட்டியின் உடலை வைத்துக் கொண்டு மக்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர் (30-சன-29)

  14. சிவகங்கை மாவட்டம் மானாமதுரை அருகே பட்டியலின சமூகத்தைச் சேர்ந்த கல்லூரி மாணவர் பைக் ஓட்டி சென்றதாக கூறி கை வெட்டிய கொடூர செயல் நடந்துள்ளது (13-பிப்-25)

  15. திருவண்ணாமலையில் உள்ள ஒரு கிராமத்தில் அறுவடைக்கு தயாராக இருந்த பட்டியலின் சமூகத்தை சேர்ந்த விவசாயின் பயிர்களை வேறு சமுதாயத்தைச் சேர்ந்த சிலர் ட்ரான்களை பயன்படுத்திய சம்பவம் நடந்தேறி உள்ளது (18-பிப்-25)

  16. மதுரை மாவட்டத்தில் திருமங்கலம் வடக்கம்பட்டியில் பட்டியலின் வகுப்பு நகர வாசிக்கும் பகுதியை வடக்கம்பட்டி காலனி என்றும் மற்ற இரு பகுதிகளை தங்களாச்சேரி, சுபவீப்பர் காலனி என்று அழைக்கின்றனர், இதேபோல் மேலூர் ஒன்றியத்துக்கு உட்பட்ட சாந்தமங்கலம் ஊரார் எச்சரிக்கை உள்ளடக்கி 60க்கும் மேற்பட்ட குடும்பங்கள் வாசித்து வரும் இடம் 'ஒத்தச்சேரி' . சேரி என்பது சேர்ந்து வாழும் இடம் என்ற பொருளை கொண்டது என்றாலும் சமூக சூழலில் பட்டியலினத்தவர் வசிக்கும் பகுதியாக சேரி என்ற சொல் பயன்படுத்துகிறது, இந்த அடையாளம் தங்களுக்கு மன வேதனை உண்டாக்குவதாக கூறுகிறார்கள் இப்பகுதியில் வசிப்பவர்கள், இதனால் தங்கள் ஊரின் பெயரை மாற்ற வேண்டும் என கோரிக்கையுடன் நிற்கிறார்கள் மதுரை மாவட்டத்தைச் சேர்ந்த ஒரு கிராம மக்கள். இது குறித்து மதுரை மாவட்ட ஆட்சியர் சங்கீதாவை தொடர்பு கொண்டு கேட்ட பொழுது அரசாங்கம் பதிவேட்டில் மேற்கண்ட கிராமத்தின் பெயர் என்னவாக இருக்கிறது என்பது குறித்து விசாரிக்கப்படும் என தெரிவித்தார். மேலும் பெயர் மாற்றம் செய்ய விருப்பப்பட்டால் மாவட்ட நிர்வாகத்திடம் முறையாக மனு கொடுத்தால் பெயர் மாற்றம் செய்து தர நடவடிக்கை மேற்கொள்ளப்படும் என உறுதியளித்தார் (12-ஏப்-25)

  17. நெல்லை நாங்குநேரி மாணவன் சின்னத்துரையிடம் பழகி வசந்தம் நகர் அருகே வரவைத்து ஐந்து பேர் கொண்ட கும்பல் சரமாரியாக தாக்கியுள்ளது படுகாயம் அடைந்த மாணவர் சின்னத்துரை தற்போது நெல்லை அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார் (16-ஏப்-25)

  18. தர்மபுரி மாவட்டம் அரூர் அருகே 17 வயது பட்டியலின சிறுவனை சாதி பெயரைச் சொல்லி இரவு முழுவதும் கட்டி வைத்து தாக்கிய சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்திய நிலையில் இது தொடர்பாக 4 பேர் கைது செய்து பட்டுள்ளனர் (02-மே-25)

எங்களோடு இணைய !

Thanks for submitting!

  • Instagram
  • White Facebook Icon

Meelvom-meetpom © 2025

bottom of page