top of page
4 (3).jpg

அரசு பணியாளர்களின் அவலம்/அலட்சியம்

இருக்கும் சிக்கல்கள்

  1. தெரு நாய்கள் அதிகரிப்பதால், மக்கள் இரவில் நடப்பதற்கும், பைக்கில் செல்வதற்கு பயமாக உள்ளது

  2. காலம் முடிந்தும் நிறைய டோல் கேட்டுகள் செயல்படுகிறது, இவை விரைவில் மூட வேண்டும்

  3. சாலை குழிகள் ரோட்டின் சமம் மான நிலையில் விரைவில் மூட வேண்டும்

2021-25 
தமிழ்நாடு பிரச்சனைகளின் பட்டியல் 

  1. வடிகால் நீர், குடி நீரில் கலக்கின்றன, இதனால் ஒர் குழந்தையை இழக்கும் சோகம் (01-சூலை-24)

  2. மனிதக் கழிவை மனிதனே அகற்றும் தீராத அவலம் கடலூரில் பல்வேறு இடங்களில் பாதாள சாக்கடை அடைப்பு; கழிவு நீரை அகற்ற பாதாள சாக்கடைக்குள் இறங்கி சுத்தம் செய்யும் அவலம்(25-சூலை-24)

  3. கோவை வெள்ளலூரில் குப்பைக் கிடங்கு தீ விபத்து அணைக்கும் பணியில் ஈடுபட்டவர்களுக்கு டீ, காபி செலவு மட்டும் 27.52 லட்சம் செலவு செய்யப்பட்டு எழுந்த சர்ச்சை (28-சூலை-24)

  4. தர்மபுரியில் ஆண்களின் பாதுகாப்பிற்காக இருபது கிலோமீட்டர் போக கஷ்டமா இருக்கு என்பதற்காக தங்கள் ஊரில் மதுக்கடை திறக்க வேண்டும் என ஆண்களோடு பெண்களும் வந்து ஆட்சியர் அலுவலகத்தில் மனு கொடுத்து போராட்டம் நடத்தினர், பின்னாளில் இது டாஸ்மாக் காண்ட்ராக்டர்களால் நடந்த நாடகம் என்று தெரிய வருகிறது(13-ஆக-24)

  5. சமீபத்தில் தெருநாய்கள் குழந்தைகளை கடித்து வரும் சம்பவம் அதிகரித்து வருகிறது இதில் செங்கல்பட்டில் ஒரே நாளில் நான்கு வகை சிறுவன் உள்பட இரண்டு பேரை கடித்த வெறி நாய் (13-ஆக-24)

  6. வேலூர் பேரணாம்பட்டில் சாலையில் சென்றவர்களை விரட்டி தெரு நாய்கள் கடித்து 7 பேர் படுகாயம் அடைந்தனர் (15-ஆக-24)

  7. சிவகங்கையில் அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் வருகையை ஒட்டி விளையாட்டு மைதானத்தை தூய்மை செய்யும் பணியில் விடுதி மாணவர்கள் ஈடுபட்ட காட்சிகள் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது (10-செப்-24)

  8. சைதாப்பேட்டை அரசு பள்ளி ஒன்றில் மாணவர்களிடம் பேசிய மகாவிஷ்ணு என்பவர் மாணவர்களிடையே மூடநம்பிக்கை மாற்றுத்திறனாளிகளே அவதூர்படுத்தும் நோக்கில் கருத்திலே தெரிவித்ததாக கூறி மாற்றுத்திறனாளிகள் சங்கத்தின் சார்பில் சைதாப்பேட்டை காவல் நிலையத்தில் புகார் அளிக்கப்பட்டது (06-செப்-24)

  9. தமிழகத்தின் நெற்களஞ்சியம் ஆன தஞ்சாவூரில் காவிரி கிளை ஆறுகள் இருப்பதால் மேட்டூரில் தண்ணீர் திறக்கும் போது வெள்ளப்பெருக்கு ஏற்படுவது வழக்கம் இதனால் கடந்த இரண்டரை ஆண்டுகளில் மட்டும் ஆற்றில் மூழ்கி 99 பேர் உயிரிழந்திருக்கின்றனர் (09-செப்-24)

  10. சிவகங்கையில் அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் வருகை ஒட்டி விளையாட்டு மைதானத்தில் தூய்மை செய்யும் பணியில் விடுதி மாணவர்கள் ஈடுபட்டதாக தகவல் வெளியாகி உள்ளது (10-செப்-24)

  11. திமுக நிகழ்ச்சியில் வழங்கிய பிரியாணி சாப்பிட்ட சிறு குழந்தைகள் பள்ளி மாணவர்கள் 40 பேர் உட்பட்ட 100க்கும் மேற்பட்டோர் வாந்தி மயக்கத்துடன் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளது (13-செப்-24)

  12. சென்னை மணலியில் உள்ள துணை மின் நிலையத்தில் உயர் மின் அழுத்தம் காரணமாக தீ விபத்து ஏற்பட்டது, இதனால் பெரும்பாலான இடங்களில் இரவு மின்தடை ஏற்பட்ட நிலையில் போர்க்கால அடிப்படையில் சீரமைப்பு பணிகள் மேற்கொள்ளப்பட்டு மின்சார இணைப்பு முழுவதும் சரி செய்யப்பட்டதாக மின்வாரியம் விளக்கம் அளித்துள்ளது (13-செப்-24)

  13. சென்னை பெரும்பாக்கத்தில் அரசு கட்டிக் கொடுத்த அடுக்குமாடி குடியிருப்பில் பராமரிக்க தவறியதால் அங்கு குடியிருக்கும் மக்கள் பல்வேறு இன்னல்களுக்கு ஆளாகியுள்ளனர் (13-செப்-24)

  14. நாகை அருகே செல்லூர் சுனாமி குடியிருப்பின் மேற்கூரை இடிந்து விழுந்து இரண்டு வயது மகன் உயிரிழந்த நிலையில் தாய்ப் படுங்கயங்களுடன் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்(20-செப்-24)

  15. சென்னையில் மீண்டும் 10 வயது சிறுவனை தெருநாய் கடித்து குதிரைய நிலையில் சிறுவனை பரிசோத்த மருத்துவர்கள் பிளாஸ்டிக் சர்ஜியை பரிந்துரைத்துள்ளனர் (20-செப்-24)

  16. சென்னை மாநகராட்சி பள்ளி வளாகத்தைச் சுற்றி புகையிலை பொருட்கள் விற்கப்படுவது குறித்தும் பள்ளியில் குடிநீர் கழிப்பிட வசதிகள் இல்லாத குறித்தும் அறிக்கை அளிக்கும்படி தமிழக அரசு சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது (21-செப்-24)

  17. உதட்டுச் சாயம் பூசியதற்காக தாவேதார் பணியிட மாற்றம் சென்னை மாநகராட்சி (26-செப்-24)

  18. நிபந்தனை பிணையில் வெளிவந்த திமுக முன்னாள் அமைச்சர் செந்தில் பாலாஜி வரவேற்று தமிழகம் முதல் அமைச்சர் ஸ்டாலின் பதிவு ஒன்றினை வெளியிட்டுள்ளார் அதில் "உன் தியாகம் பெரிது" என குறிப்பிட்டுள்ளார் (26-செப்-24)

  19. விருதுநகர் மாவட்டம் சாத்தூர் அருகே பட்டாசு சாலையில் வெடி விபத்து ஏற்பட்ட நிலையில் பல கிலோமீட்டர் தூரத்துக்கு அதிர்வு ஏற்பட்டதால் தகவல் வெளியாகி உள்ளது (28-செப்-24)

  20. விருதுநகர் சாத்தூர் அருகே திருவேல் விளையாடிக் கொண்டிருந்த ஐந்து வயது சிறுமியை மின்சாரம் தாக்கி உயர்ந்த சம்பவம் அப்பகுதி பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது (30-செப்-24)

  21. சென்னை அசோக் பில்லர் பகுதியில் சாலையில் தோண்டப்பட்டுள்ள மழை நீர் வடிதல் பள்ளத்தில் வாலிபர் தவறி விழுந்து உயர்ந்த சம்பவம் அப்பகுதியில் அதிர்ச்சி ஏற்பட்டுள்ளது (30-செப்-24)

  22. 100 நாள் வேலைத்திட்டத்தை பெரும்பாலான ஊராட்சி தலைவர்கள் கொள்ளையடிக்கும் திட்டமாக பயன்படுத்தி வருவதாக உயர் நீதிமன்ற மதுரை கிளை வேதனை தெரிவித்துள்ளது (06-அக்-24)

  23. திருப்பத்தூர் அருகே தவறான சிகிச்சை உயிரிழந்ததாக கூறி தனியார் மருத்துவமனை வளாகத்தில் உயிரிழந்த நபரின் உடலை வைத்து போராட்டத்தில் ஈடுபட்ட உறவினர்கள் (02-அக்-24)

  24. சென்னை மெரினா கடற்கரையில் நடைபெற்ற விமான சாகச நிகழ்ச்சியில் 230 பேருக்கு மயக்கம் 93 பேர் மருத்துவமனையில் அனுமதி 5 பேர் உயிரிழந்த சோகம், இதில் சரியாக குடிநீர் வசதி இல்லை உணவு இல்லை, இது போக விமான சாகச கண்காட்சி முடிந்து இரண்டு மணி நேரம் வரை போக்குவரத்து நெரிசல் குறையாமல் இருந்தது மக்கள் கடும் அவதி அடைந்தனர் (06-அக்-24)

  25. திருப்பூரில் விதிமுறைக்கு புறம்பாக குடியிருப்பில் மத்தியில் பட்டாசு தயாரிக்கும் போது ஏற்பட்ட வெடிவிபத்தில் உயிரிழந்தவர்களின் மூன்றாக உயர்ந்துள்ளது மேலும் 10 பேர் சிகிச்சைக்காக அனு மதிக்கப்பட்டுள்ளனர்(08-அக்-24)

  26. புதுக்கோட்டை கீழ நான்காம் வீதியில் உள்ள சவர்மா கடையில் கெட்டுப்போன சிக்கன் வைப்பது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது இதை தொடர்ந்து கடைக்கு சீல் வைக்கப்பட்டு நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது, இதில் சிக்கன் ரோல் சாப்பிட்ட 5 பேருக்கு உடல் நல குறைவு (14-அக்-24)

  27. கோவை மற்றும் பொள்ளாச்சி அருகே அறுந்து கிடந்த உயர் அழுத்த மின்சார வயரை மிதித்த இரண்டு பெண் யானை உயிர் இழந்தன (15-அக்-24)

  28. வடகிழக்கு பருவங்களின் காரணமாக சென்னையில் அதிக கன மழை செய்து வரும் நிலையில் பெரியமேடு பகுதியில் பீகாரைச் சேர்ந்த அகமது (55) மின்சாரம் தாக்கி ஒருவர் உயர்ந்திருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது (15-அக்-24)

  29. சிறிய குற்றங்களுக்காக கடைநிலை ஊழியர்கள் மீது துறை ரீதியான நடவடிக்கை எடுக்கப்படும் நிலையில் உயர் அதிகாரிகள் மீது ஏன் நடவடிக்கை எடுப்பதில்லை என சென்னை உயர்நீதிமன்றம் கேள்வி எழுப்பியுள்ளது (22-அக்-24)

  30. திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோயில் கந்த சஷ்டி விழாவின் போது கூடுதல் கட்டணம் வசூல் செய்வதற்கு தடை கூறிய வழக்கு நீதிபதிகள் சுப்பிரமணியன், விக்டோரியா கௌரி அமர்வில் நேற்று விசாரணைக்கு வந்துள்ளது இதில் நீதிபதிகள் கோயிலில் "தரிசனத்திற்கு ஆயிரம் இரண்டாயிரம் என வசூலித்தால் ஏழை மக்கள் எவ்வாறு சாமி தரிசனம் செய்வார்கள்" என கேள்வி எழுப்பினர் (25-அக்-24)

  31. திருப்பத்தூர் அருகே இடுப்பளவு தண்ணீரில் இறங்கி பாலம் வேண்டும் என பாதையில் ஏஞ்சபடி பள்ளி மாணவர்கள் கல்லூரி மாணவர்கள் மற்றும் பொதுமக்கள் போராட்டத்தில் ஈடுபட்டதால் பரபரப்பு ஏற்பட்டது (25-அக்-24)

  32. அலங்காநல்லூர் அழகே அங்கன்வாடி மையத்தில் பணியாளர் ஒருவர் மூன்று வயது குழந்தைக்கு முழங்காலில் சூடு வைக்கப்பட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது ஏழு வழி நடவடிக்கை எடுக்க வேண்டும் என பெற்றோர்கள் கோரிக்கை வைத்துள்ளனர் (25-அக்-24)

  33. சென்னை மூலக்கொத்தளம் பகுதியில் தமிழ்நாடு அரசின் நலபுற வாழ்விட மேம்பாட்டு வாரியும் சார்பில் 1044 குடியிருப்புகள் கட்டப்பட்டிருக்கிறது குடியிருப்பில் சில குறைபாடுகள் இருப்பதாக இங்க இருக்கும் மக்கள் தெரிவிக்கின்றனர் குடிநீர் கழிவு நீர் குறைபாடு இருக்கலாம் மின் இணைப்பில் பிரச்சினை இருப்பதாகவும் மக்கள் குற்றம் சாடின்றனர் அதை சரி செய்து தரச் சொல்லி இங்கிருக்கும் மக்கள் வலியுறுத்தி இருக்கிறார்கள் (25-அக்-24)

  34. திருப்பூர் வேடப்பட்டியில் முறையாக வடிக்கால் அமைக்காமல் முறைகேடாக வாய்க்கால் கரை உடைக்கப்பட்டு தண்ணீரை திருப்பி விடுவதால் குடியிருப்பு வாசிகள் பாதிக்கப்படுவதாக பொதுமக்கள் குற்றம் சாடியுள்ளனர் (26-அக்-24)

  35. சென்னையில் 9 கால்பந்து திடல்கள் தனியார் மயமாக்கப்படுவதற்கு எதிர்ப்பு கிளம்பிய நிலையில், மாணவர்களின் நலன் கருதி எப்போதும் போல தொடரும் என சென்னை மாநகராட்சி மேற்பார் தெரிவித்துள்ளார் (30-அக்-24)

  36. நீலகிரி மாவட்டம் கோத்தகிரி அரசு மருத்துவமனையில் இரவு நேரத்தில் மின்சாரம் தடைபட்ட நிலையில் டார்ச் லைட் மட்டும் கைபேசி வெளிச்சத்தில் குழந்தைக்கு சிகிச்சை அளித்துள்ளனர் மருத்துவர்கள் (13-நவ-24)

  37. சென்னை கிண்டி கலைஞர் நூற்றாண்டு மருத்துவமனையில் புற்றுநோய் தலைமை மருத்துவர் பாலாஜியை கத்தியால் குத்தியதை அடுத்து, செவிலியர்கள் மருத்துவர்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர் இதில் முக்கிய மாக போதிய மருத்துவர்கள் இல்லாததே சிக்கல்களுக்கு முக்கிய காரணம் என்று தெரிவித்துள்ளனர் (13-நவ-24)

  38. ஆம்பூர் அருகே அரசு மருத்துவமனையில் பிரசவத்திற்காக அனுமதிக்கப்பட்ட இளம் பெண்ணிற்கு மருத்துவர்கள் மற்றும் செவிலியர்கள் முறையாக சிகிச்சை அளிக்காததால் இளம்பெண் உயர்ந்ததாக கூறி அவரது உறவினர்கள் சாலை மறியல் ஈடுபட்டுள்ளனர் (14-நவ-24)

  39. மீண்டும் கிண்டி கலைஞர் நூற்றாண்டு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த விக்னேஷ் என்றவர் சிகிச்சை பலனின்றி உயிர் இறந்தார். இந்நிலையில் பெரும்பாக்கம் பகுதியை சேர்ந்த விக்னேஷ் (33) கலைஞர் நூற்றாண்டு மருத்துவமனையில் வயிற்று வலி காரணமாக அனுமதிக்கப்பட்டுள்ளார் அவருக்கு மருத்துவர்கள் அவசர சிகிச்சை பிரிவில் வைத்து சிகிச்சை அளித்துள்ளார் ஆனால் அவர் சிகிச்சை பலனின்றி உயிர் இழந்து உள்ளார் என்ற செய்தி வெளியாகியுள்ளது (15-நவ-24)

  40. சென்னை கிண்டியில் உள்ள கலைஞர் நூற்றாண்டு உயர் சிறப்பு மருத்துவர் மணியில் திடீரெனம் ஏற்பட்ட மின்தடையால் நோயாளிகள் பாதிப்பிற்குள் ஆகினர் (16-நவ-24)

  41. புதுக்கோட்டை மாவட்டத்தில் அதிகரிக்கும் டெங்கு காய்ச்சல் இதில் மூன்று பேருக்கு டெங்கு பாதிப்பு உறுதி, இந்த மாவட்டத்தில் காய்ச்சல் பாதிப்பு அதிகரித்து வருவதால் அரசு மருத்துவமனையில் நோய் பாதிக்கப்பட்ட மக்கள் குவிந்து வருகின்றனர் (18-நவ-24)

  42. சென்னை பட்டினமாக்கம் குடிசை மாற்று வாரிய குடியிருப்பில் மேற்கூரை இடிந்து விழுந்ததில் இளைஞர் குலாப் (22) ஒருவர் உயிரிழந்தார் (05-டிச-24)

  43. சென்னை பல்லாவரம் அடுத்த மலைமேடு பகுதியில் 30 பேருக்கு நேற்று இரவு திடீரென வாந்தி வயிற்றுப்போக்கு தலைசுற்றல் உள்ளிட்ட உடல் உபாதைகள் ஏற்பட்ட உள்ளன இதனை அடுத்த உடல் நிலையாக அனைவரும் குரோம்பேட்டை அரசு மருத்துவ சிகிச்சை அனுப்பிக்கப்பட்டுள்ளனர் இதில் இருவர் உயிரிழந்ததாக தகவல் வெளியாகியுள்ளது மேலும் இதன்பின் நிலையில் அந்தப் பகுதியில் குடிநீரில் கழிவு நீர் கலந்துள்ளதாகவும் அதனை குடித்ததால் பாதிப்பு ஏற்பட்டது என்றும் அப்பகுதி மக்கள் தெரிவிக்கின்றனர், குடிநீர் தான் உடல்நிலை பாதிப்பு காரணமாக என்ற கோணத்தில் போலீசார் விசாரணை தொடர்கிறார்கள் (05-டிச-24)

  44. திண்டுக்கல் மாவட்டத்தில் தனியார் மருத்துவமனை ஒன்றில் ஏற்பட்ட தீ விபத்து சிறுவன் உட்பட ஏழு பேர் பரிதாபமாக உயிரிழந்தனர் (12-டிச-24)

  45. சென்னை பட்டினப்பாக்கத்தில் மீண்டும் குடிசை மற்றும் வாரியத்தின் மேற்குறை இடிந்து விழுந்த விபத்தில் இரண்டு பேர் காயமடைந்தனர் (23-டிச-24)

  46. சென்னை புழல் மத்திய சிறையில் தீ விபத்து, சிறை கண்காணிப்பாளர்கள் காலையில் ரோந்து பணியில் ஈடுபட்ட போது தீ பற்றி எரிவதை கவனிக்கவில்லை. தவிர, இரண்டு நாட்களுக்கு முன்னால் பழைய கோப்புகளை அளிப்பதற்காக பணியில் அமர்த்தபட்ட சில கைதிகள் தீயை மூட்டி இருக்கலாம் என சிறையை அதிகாரி மேலும் தெரிவித்தார் (25-டிச-25)

  47. திருவையாறு அருகே தஞ்சாவூர் மாவட்டம் விவசாயி முனி அரசுவின் ஆதார் அட்டையில் வயது தவறாக குறிப்பிட்டுள்ளது பிறந்த ஆண்டு 1955 என்பதற்கு பதில் 1900 என இருப்பதால் முதியோருக்கு கடன் உதவி தொகை கிடைப்பதில் சிக்கல் ஏற்பட்டுள்ளது, இதனை சரி செய்ய வட்டாட்சியர் அலுவலகம் சென்று பயனிலை என முனி அரசு வேதனையுடன் கூறுகிறார், இதுவரை தன்னுடைய கவனத்திற்கு வரவில்லை என்று உரிய நடவடிக்கை எடுப்பார் என வட்டாட்சியர் தெரிவித்தார் (29-டிச-24)

  48. மதுரையில் நாய் கடி தொல்லை கடந்த ஏழு ஆண்டுகளில் இல்லாத அளவுக்கு அதிகரித்துள்ளது மதுரை மாநகராட்சி உட்பட்ட பகுதியில் 2024 நவம்பர் மாதம் வரை 14,130 பேரை நாய்கள் கடித்துள்ளனர் 2018இல் 3986, 2023இல் 13,280 பேரையும் நாய்கள் கடித்துள்ளனர் ஐந்து ஆண்டுகளில் நான்கு மடங்கு அதிகரித்துள்ளது (31-டிச-24)

  49. விழுப்புரம் விக்கிரவாண்டில் உள்ள தனியார் பள்ளியில் மூன்றரை வயது குழந்தை செப்டிக் டேங்கில் விழுந்து உயிரிழந்த சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது (03-சன-25)

  50. தர்மபுரி மாவட்டம் பாலக்காடு அருகே அரசு ஊராட்சி ஒன்றிய நடுநிலை பள்ளி உள்ளது, இந்நிலையில் இந்த பள்ளி வளாகத்தில் உள்ள கழிவறையை சுத்தம் செய்வது கழிவறைக்கு தண்ணீர் நிரப்புவது பள்ளியை தூய்மை படுவது உள்ளிட்ட பணிகளை பள்ளி மாணவிகளை வைத்து செய்து வந்துள்ளனர் இதை அந்த கிராமத்தைச் சேர்ந்தவர்கள் வீடியோ எடுத்து கல்வித்துறைக்கு புகார் அளித்துள்ளனர் இதனை அடுத்து பள்ளி தலைமை ஆசிரியை கலைவாணியே தற்காலிக பணியிடை நீக்கம் செய்து மாவட்ட கல்வி அலுவலர் தென்றல் உத்தரவிட்டார் (12-சன-25)

  51. தமிழ்நாடு மின்வாரியம் கடந்த 10 ஆண்டுகளில் வாங்கிய கடனுக்காக வட்டி ஒரு லட்சம் கோடி ரூபாய் தாண்டியது நிதி நிறுவனங்கள் வங்கிகளிடம் கடன் வாங்கியே நடைமுறை மூலதன செலவுகளும் புதிய மின் திட்டங்களும் மேற்கொள்ளப்படுகின்றன (13-சன-25)

  52. ஸ்ரீ பெரம்பத்தூரில் பெண் தூய்மையாக பணியாளரை மனிதக் கழிவு அகற்றக்கோரி மேற்பார்வையாளர் உரிமையில் பேசியதாக எழுந்த புகாரின் பேரில் ஐந்து பிரிவின் கீழ் மேற்பார்வையாளர் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது (27-சன-25)

  53. வேளச்சேரி பகுதியில் பவானி தெருவில் வசித்து வரும் நாகேந்திரனின் ஏழு மாத குழந்தை உட்பட எட்டுக்கும் மேற்பட்ட வரை தெரு நாய் கடித்து கொதறி உள்ளது (09-பிப்-25)

  54. விழுப்புரத்தில் அரசு பள்ளியில் ஆறாம் வகுப்பு படிக்கும் மாணவரை உடற்கல்வி ஆசிரியர் தலையில் பரம்பால் அடித்ததால் மூளையில் ரத்தக் கசிவு ஏற்பட்டுள்ள சம்பவம் அதிர்ச்சியை உள்ளது (31-மார்-25)

  55. தமிழகத்தில் நாய் தொல்லைகள் அதிகரிக்கிற நிலையில், ஈரோடு அருகே விவசாயிக்கு சொந்தமான ஆட்டுப்பட்டிக்குள் புகுந்த நாய்கள் கடித்ததில் 14 ஆடுகள் உயிரிழந்த நிலையில் மூன்று ஆடுகள் படுகாயம் அடைந்துள்ளன (01-ஏப்-25)

  56. திருநெல்வேலி மாவட்டம் அம்பாசமுத்திரம் அருகே கல்லிடைக்குறிச்சி பேரூராட்சி பகுதியில் தெரு நாய்களால் சாலையில் அடிக்கடி விபத்து ஏற்படுவதோடு, தெரு நாய்கள் கடித்து பத்துக்கும் மேற்பட்டோர் காயம் அடைந்தனர் (03-ஏப்-25)

  57. தர்பூசணியில் நிறம் சேர்க்க ரசாயனம் கலக்கப்படுவதாக கூறினேன் இருந்த உணவு பாதுகாப்பு அலுவலர் சதீஷ்குமார் தற்போது பணியிட மாற்றம் செய்யப்பட்டு இருக்கிறார், இந்த பிரச்சாரத்தால் மக்கள் தர்பூசிணியை வாங்குவதை தவிர்க்க ஆரம்பித்தனர், தர்பூசணியின் விலை ஒரு டன் ₹ 10,000 மேல் விற்பனையான நிலையில் உணவுத்துறை அதிகாரிகளின் தவறான தகவல்களால் தற்போது ஒரு டன் தர்பூசணி ரூபாய் 2,000 விற்பனையாகிறது என்று விவசாய சங்கத்தினர் கவலை தெரிவித்தனர் (05-ஏப்-25)

  58. நாய்க்கடி பிரச்சனையை சர்வசாதாரணமாக புறம் தள்ளிவிட முடியாது நாடு முழுவதும் அதிகரித்து வரும் நிலையில் தமிழ்நாட்டில் கடந்த 2025ஆம் ஆண்டு தொடங்கி இன்று வரை மட்டும் தமிழ்நாட்டில் எட்டு பேர் நாய் கடியால் உயர்ந்த உள்ளனர், ஒன்றை லட்சம் பேர் நாய் கடியால் மருத்துவமனைகளில் சிகிச்சை பெற்றுள்ளனர் என்று தரவுகள் வருகின்றன (09-ஏப்-25)

  59. தென்காசி மாவட்டம் சிவகிரியில் உள்ள அரசு மருத்துவமனையில் மருத்துவர்கள் மற்றும் பணியாளர்கள் பற்றாக்குறையால் விபத்து மற்றும் உடல் நலக்குறைவால் மருத்துவமனைக்கு வரும் நோயாளிகளுக்கு சிகிச்சை அளிக்க முடியாத அவல நிலை உள்ளது, இந்நிலையில் காயம் ஏற்பட்ட நோயாளி ஒருவர் சிகிச்சைக்காக மருத்துவமனை சென்றுள்ளார் அப்போது வழக்கம் போல் மருத்துவர்கள் மற்றும் பணியாளர்கள் இல்லாததால் மருத்துவமனையில் உள்ள தூய்மை பணியாளர் ஒருவர் அந்த நோயாளிக்கு கட்டு போட்டு சிகிச்சை அளித்துள்ளார் இந்த வீடியோ சமூக வலைத்தளங்கள் வேகமாக பரவி வருகிறது (11-ஏப்-25)

  60. வேலூர் மாவட்டத்தில் வயிற்றுப்போக்கு என தனியார் மருத்துவமனைக்கு வந்த குழந்தைக்கு குளுக்கோஸ் ஏற்ற பல இடங்களில் செவிலியர்கள் ஊசி செலுத்தியதால் குழந்தை உயிரிழந்ததாக உறவினர்கள் குற்றம் சாலி முன்வைத்தனர் இதனைக் குறித்து போலீசார் விசாரித்து வருகின்றனர் (12-ஏப்-25)

  61. சர்ச்சைக்குரிய வகையில் பேசியதற்காக அமைச்சர் பொன்முடி தற்போது மன்னிப்பு கேட்டுள்ளார் இதனை அடுத்து அவர் வகித்த வந்த கட்சி பொறுப்பில் இருந்து நீக்கப்பட்டார் (12-ஏப்-25)

  62. திண்டுக்கல் மாவட்டம் கன்னிவாடி அருகே சுரக்காய் பட்டியில் செயல்பட்டு வரும் அங்கன்வாடியில் இரண்டரை வயது குழந்தைக்கு அங்கு உதவியாளராக பணியாற்றும் செல்லம்மாள் கழுத்தில் சூடு வைத்ததாக கூறப்படுகிறது இதை குறித்து குழந்தையின் தந்தை காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளார் , இதனை அடுத்து பணியாளர்களை பணிவிடை நீக்கம் செய்து உத்தரவிட்டுள்ளார் மாவட்ட ஆட்சியர் சரவணன் (17-ஏப்-25)

  63. திருப்பூர் மாவட்டம்: பல்லடம் அரசு மருத்துவமனையில் மின்சாரம் துண்டிக்கப்பட்டதால் செல்போன் லைட்டில் மருத்துவம் பார்த்த அவலம் (22-ஏப்-25)

  64. வாணியம்பாடி அரசு மருத்துவமனையில் தூய்மை பணியாளர்களை வைத்து மருத்துவம் பார்க்கும் அவலம் எலிகளில் கூடாரமாக மாறி உள்ள மருத்துவமனையால் நோயாளிகள் கடும் அவதி அடைந்து வருகின்றனர் (22-ஏப்-25)

  65. நெல்லை அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் நோயாளிகளை அச்சுறுத்தும் வகையில் சுற்றித் திரியும் தெருநாய்களால் பொதுமக்கள் அச்சமடைந்தனர் (28-ஏப்-25)

  66. சென்னை அமைந்தகரையில் மூடப்படாமல் இருந்த பாதாள சாக்கடையில் சிறுவன் ஒருவன் விழுந்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது (02-மே-25)

எங்களோடு இணைய !

Thanks for submitting!

  • Instagram
  • White Facebook Icon

Meelvom-meetpom © 2025

bottom of page