
அரசு பள்ளி /கல்லூரி
இருக்கும் சிக்கல்கள்
-
அரசு பள்ளிகள் பராமரிப்பு இன்றி கட்டிடங்கள் சீர்குலைவு, ஆதலால் பள்ளி பராமரிப்பு மேம்படுத்தல் தேவை
-
அரசு பள்ளிகளில் சரியான முறையில் கழிப்பிட வசதி இல்லாதது, பராமரிப்பின்றி அவல நிலையில் உள்ளது
2021-25
தமிழ்நாடு பிரச்சனைகளின் பட்டியல்
-
திருநெல்வேலியில் குறைந்தது 100 பள்ளிக் கட்டிடங்கள் மோசமான நிலையில் உள்ளன. 2021 ஆம் ஆண்டு ஸ்ரீபுரத்தில் சுவர் இடிந்து விழுந்து மூன்று மாணவர்கள் இறந்ததைத் தொடர்ந்து, அனைத்து அரசு மற்றும் அரசு உதவி பெறும் பள்ளிகளிலும் தொடர் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் எடுக்கப்படும் என்று அரசு அறிவித்தது.ஆனால், தமிழக அரசு சீரமைப்பு பணிகள் மேற்கொள்ள நிதி ஒதுக்கவில்லை (04-சூலை-24)
-
அண்ணா பல்கலைக்கழகத்துடன் இணைக்கப்பட்ட பொறியியல் கல்லூரிகளில் ஏராளமான ஆசிரியர் பணியிடங்கள் "போலி" பேராசிரியர்களால் நிரப்பப்பட்டதைக் கண்டறிந்த பின்னர், அண்ணா பல்கலைக்கழகம் தனது சொந்த விசாரணையில் ஒரே நபர் 30க்கும் மேற்பட்ட கல்லூரிகளில் வெவ்வேறு பதவிகளில் இருப்பது உட்பட, 211 பேர் பல கல்லூரிகளில் 2,500 காலியிடங்களை நிரப்பியுள்ளதைக் கண்டறிந்தது (24-சூலை-24)
-
கடும் நிதி நெருக்கடி, பேராசிரியர் பற்றாக்குறையால் காமராஜர் பல்கலைக்கழகம் முடங்கும் அபாயம் (24-சூலை-24)
-
சென்னை டி.பி.ஐ. பேராசிரியர் அன்பழகன் கல்வி வளாகம் முற்றுகையிடப்பட்டு,அரசாணை 243 நீக்கம் உள்ளிட்ட 31 அம்சக் கோரிக்கைகளை நிறைவேற்றுக என போராட முயன்ற தொடக்கக்கல்வி ஆசிரியர்கள் கைது (29-சூலை-24)
-
மேட்டூர் அருகே அரசு உதவி பெறும் பள்ளி உடற்கல்வி ஆசிரியர் அண்ணாமலை மாணவர்களை காலால் எட்டி உதைத்து அடிக்கும் காட்சிகள் சமூக வலைத்தளங்களில் வெளியாக உள்ள நிலையில் அவரை பணியிடை நீக்கம் செய்து உத்தரவிட்டனர் சேலம் மாவட்ட முதன்மை கல்வி அலுவலர் கபீர் (11-ஆக-24)
-
சிவகங்கை எஸ் எஸ் கோட்டை அரசு பள்ளியில் மதிய உணவு சாப்பிட்ட மாணவர்களுக்கு தொடர் வாந்தி மயக்கம் ஏற்பட்ட நிலையில் அவர்களுக்கு திருப்பத்தூர் அரசு மருத்துவமனையில் சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது (27-செப்-24)
-
திருப்பூர் மாவட்டம் பல்லடம் அருகே உள்ள காமநாயக்கன்பாளையத்தில் உள்ள அரசு உயர்நிலைப் பள்ளியில், பத்தாவது வகுப்பறையில் சுவர் மற்றும் பள்ளி மாணவர்கள் அமரும் இருக்கைகள் முழுவதும் மனிதக் கழிவுகள் வீசப்பட்டிருந்தது இதை அடுத்து பள்ளியின் தலைமை ஆசிரியர் உடனடியாக காவல் நிலையத்தில் தகவல் அளித்துள்ளார் (29-சன-25)
-
வாணியம்பாடி அருகே அரசு பள்ளியில் கடந்த ஆறு மாதத்திற்கு முன்பு புதிதாக திறக்கப்பட்ட வகுப்பறையின் மேற்கூரை பூச்சி பெயர்த்து விழுந்து மூன்று பள்ளி மாணவர்கள் படுகாயம் அடைந்தனர் (04-மார்-25)
-
சேத்துப்பட்டு பகுதியை சேர்ந்த கோபிநாத் நித்யா தம்பதியின் 17 வயதான மகன் கிஷோர் அதே பகுதியில் உள்ள தனியார் பள்ளியில் படித்து வந்துள்ளார். இந்நிலையில் பள்ளியில் சக மாணவர்கள் உருவ கேலி செய்ததால் கிஷோர் மன உளைச்சலுக்கு ஆளானதாக கூறப்படும் நிலையில் வீட்டின் நான்காவது மாடியில் இருந்து கீழே குதித்து தற்கொலை செய்து கொண்டார் (10-ஏப்-25)
-
கள்ளக்குறிச்சி சங்கராபுரம் அருகே அரசு உயர்நிலைப்பள்ளி மாணவர்களை தேனீக்கள் கொட்டியதில் இருவதற்கும் மேற்பட்டோர் அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டதால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது (22-ஏப்-25)




