top of page
2315_1_5_2024_16_11_48_2_ROAD2.jpg

சாலை மற்றும் போக்குவரத்து

இருக்கும் சிக்கல்கள்

  1. ஓய்வு அடைந்த போக்குவரத்து பணியாளர்களுக்கு விரைவில் முறையான ஊதியம் வழங்க வேண்டும்

  2. தமிழக அரசு பேருந்துகள் பராமரிப்பின்றி மக்கள் பாதுகாப்பின்றி பயணம் செய்கின்றன, மழை பெய்தால் நீர் பேருந்துக்குள் வருகிறது, ஆங்காங்கே இலவச பேருந்து படிக்கட்டு, டயர்கள் விழுகின்றன, டிரைவர் கட்டுப்பாடுயின்றி கடைகள் மேல் மோதுகின்றன

  3. தமிழகம் முழுவதும் உள்ள அரசு பேருந்து நிறுத்தத்தில் உள்ள கழிப்பிடங்களின் அவலம்

2021-25 
தமிழ்நாடு பிரச்சனைகளின் பட்டியல் 

  1. சென்னையில் சாலை குண்டு குழியுமாக உள்ளன, இந்த ஆலட்சியத்தால், அண்ணன் கண் முன்னே தங்கை மீது லாரி ஏற்றி இழந்த சோகம்(13-சூலை-24)

  2. சென்னை காமராஜர் சாலையில் முதல்வரின் கான்வாய் வாகனம் சென்ற பாதையில் திடீரென ஆட்டோ கவிழ்ந்து விபத்தில் ஐந்து வயது சிறுவன் சிகிச்சை பலனின்றி உயிரிழப்பு (5-ஆக-24)

  3. திருவாரூர் மாவட்டம் பேரளம் மற்றும் புதுச்சேரி மாநிலத்திற்கு உட்பட்ட காரைக்கால் இடையே புதிதாக அகல ரயில் பாதை பணிகள் நடைபெற்று வருகிறது, இதற்காக கரூரில் இருந்து ஜல்லி கற்களை ஏற்றிக்கொண்டு காரைக்கால் நோக்கி கனக லாரி ஒன்று சென்று கொண்டிருந்தது அப்போது திருவாரூர் மாவட்டம் பேரளம் அருகே கோவில்திருமாளம் பகுதியில் அதிவேகமாக சென்ற லாரியை வளைவில் வேகமாக திரும்பி உள்ளது அப்போது கட்டுப்பாட்டை இழந்த லாரி கவிழ்ந்து விபத்துக்குள்ளாக இதில் சாலையோரம் இருசக்கர வாகனத்தில் சென்று கொண்டிருந்த வரகூர் கிராமத்தை சேர்ந்த மோகன்(35) அவரது இரண்டு குழந்தைகளான நிரோஷன் (7) வியோசினி(4) உட்பட மூவர் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தனர், லாரியை ஒட்டி வந்த ஒட்டுநர் விக்னேஷ் தப்பி ஓட்டம் (10-ஏப்-25)

எங்களோடு இணைய !

Thanks for submitting!

  • Instagram
  • White Facebook Icon

Meelvom-meetpom © 2025

bottom of page