top of page
06MA-CITY-DEEPAM.jpeg

எங்களைப் பற்றி

மீள்வோம் மீட்போம் பார்வையில் இருந்து தமிழர் தேசியம் என்றால் என்ன?

தமிழர்கள்;

தமிழர்களால்;

தமிழ் நாட்டிலும் மற்ற தமிழர்களின் தாய் நிலங்களிலும்,

தமிழர்களுக்காக உரிமைகளினை வென்றெடுத்து,

தமிழர் அறம்சார் அரசினை நிறுவி,

தமிழர் மக்களாட்சி  வழங்குவதே;

மீள்வோம் மீட்போம் பார்வையினில் இருந்து

தமிழர் தேயம் அல்லது தமிழர் தேசியம் ஆகும்!

தமிழர்களின் அடையாளத்தை மீட்டெடுக்கும் நமது தலையாய குறிக்கோள்கள்

1. தமிழர் மரபு வாழ்வியல் மறுமலர்ச்சி

தமிழர்களின் அன்பு, அறம், அறிவு, ஒழுக்கம் நிறைந்த பாரம்பரிய வாழ்வியல் நெறிகளை மீண்டும் எழுச்சி பெறச் செய்வோம். நம் பெருமைமிகு பண்பாட்டின் அடித்தளத்தில் இன்றைய குடும்பங்களில் அமைதியையும், சமூகத்தில் நல்லிணக்கத்தையும் உருவாக்குவோம்.

 

2. அறம்சார் அரசியல் மறுமலர்ச்சி

தமிழர் அறம்சார் அரசியலினை உருவாக்குவோம். நம் முன்னோர்கள் கண்ட அறநெறி ஆட்சிமுறையை மீண்டும் கொண்டு வந்து, ஊழலற்ற, நேர்மையான, மக்களை மையப்படுத்திய ஆட்சியை நிலைநாட்டுவோம்.

 

3. தமிழர் அரசியல் சுயாட்சி

தமிழ் நாட்டு அரசியல் அதிகாரம் தமிழர்களிடமே இருக்கச் செய்வோம். நம் மண்ணின் முடிவுகளை நாமே எடுப்போம், நம் வளங்களை நாமே நிர்வகிப்போம், நம் எதிர்காலத்தை நாமே வடிவமைப்போம்.

 

4. தமிழர்களுக்கு உரிய முன்னுரிமை

தமிழ்நாட்டில் அனைத்து துறைகளிலும் கட்டாயம் தமிழர்களுக்கு முன்னுரிமை வழங்கச் செய்வோம். நம் மண்ணின் வளங்கள், வாய்ப்புகள் நம் மக்களுக்கே முதலில் கிடைக்க வழிவகுப்போம்.

 

5. தமிழர் ஆட்சி அமைப்பு

தமிழநாட்டு அரசின் பெரும்பான்மை அமைச்சர்களும் 100% பிறப்பால் தமிழர்களாகவே இருத்தல் வேண்டும். தமிழரின் நலன்களை மனமார உணரும் தமிழ் மரபுடையோரே நம் மக்களை வழிநடத்த வேண்டும்.

 

6. தமிழருக்கான வேலைவாய்ப்பு உறுதி

தமிழ்நாட்டு அரசு வேலைவாய்ப்பு மற்றும் அரசு பணியிடங்கள் நிரப்புவதில் 90% ஒதுக்கீடு தமிழர்களுக்கு வழங்கப்படச் செய்வோம். நம் இளைஞர்கள் தங்கள் சொந்த மண்ணில் பணியாற்றி வளர்ச்சியடைய வழி செய்வோம்.

 

7. தமிழ் வழி கல்வி மறுமலர்ச்சி

தமிழ்நாட்டில் அனைத்து பள்ளி, கல்லூரி மாணவர்களையும் தமிழ் மொழி வழியிலேயே கற்கச் செய்வோம். நம் குழந்தைகள் தாய்மொழியில் கற்பதால் ஆழமான புரிதலும், தெளிவான சிந்தனையும் பெறுவார்கள், அதே நேரத்தில் நம் மொழியும் செழிக்கும்.

 

8. தமிழ் வழிபாட்டு முறை மீட்டெடுப்பு

தமிழ் நாடு மற்றும் இதர தாய் தமிழ் நிலங்களில் வழிபாட்டு மொழியாக 100% தமிழை மட்டுமே இருக்கச் செய்வோம். நம் முன்னோர்கள் இறைவனை அழைத்த அதே இனிய தமிழில் நாமும் வழிபடும்போது, ஆன்மீக அனுபவம் முழுமை பெறும், மொழியின் புனிதமும் காக்கப்படும்.

மீள்வோம் மீட்போம் அமைப்பின் தேவை என்ன? அதன் நோக்கம் என்னென்ன?

1. மீள்வோம் மீட்போம் அமைப்பு இணைய தளம் வாயிலாக செயல்படும் ஒரு தமிழர் தேய அமைப்பு. இணையம் வழியாக தமிழர் தேய கொள்கைகளையும் கோட்பாடுகளையும் கடை கோடி தமிழர் வரை எடுத்து செல்ல விரும்பும் ஒரு அமைப்பு.

 

2. இன்றைய சூழலில் இணைய ஊடகம் வழியாக தமிழர் கருத்தியல் கொள்கைகளை சாதாரண மனிதனிடம் எடுத்து செல்லும் அமைப்புகள் மிகவும் சிறிய எண்ணிக்கையிலேயே உள்ளனர். தமிழர் தேய கொள்கைகள் பற்றிய விழிப்புணர்வு தமிழ் நாட்டில் அனைவருக்கும் மிகவும் அவசியமான ஒன்று. ஒரு கருத்தியலினை செவ்வனே தெரிந்த பின் அதனை ஏற்றுக்கொள்ள வேண்டுமா அல்லது புறம் தள்ள வேண்டுமா என்று தமிழர்கள் முடிவு செய்ய வேண்டும்.

 

“எப்பொருள் யார்யார்வாய்க் கேட்பினும் அப்பொருள் மெய்ப்பொருள் காண்ப தறிவு”

எப்பொருளை யார் யார் இடம் கேட்டாலும் (கேட்டவாறே கொள்ளாமல்) அப் பொருளின் மெய்யானப் பொருளைக் காண்பதே அறிவாகும்.

 

“ஐயத்தின் நீங்கித் தெளிந்தார்க்கு வையத்தின் வானம் நணிய துடைத்து.”

ஐயத்திலிருந்து நீங்கி மெய்யுணர்வு பெற்றவர்க்கு அடைந்துள்ள இவ்வுலகை விட அடைய வேண்டிய மேலுலகம் அண்மையில் உள்ளதாகும்.

 

“வையத்துள் வாழ்வாங்கு வாழ்பவன் வான்உநற்யும் தெய்வத்துள் வைக்கப் படும்.”

உலகத்தில் வாழவேண்டிய அறநெறியில் நின்று வாழ்கிறவன், வானுலகத்தில் உள்ள தெய்வ முறையில் வைத்து மதிக்கப்படுவான்.தமிழர் தேய கொள்கையையும், கருத்தியலையும் சித்தாந்த அடிப்படையில் தமிழர்களிடம் இணையதள ஊடகங்கள் வழியாகஎடுத்து செல்லவே மீள்வோம் மீட்போம் அமைப்பு இன்றைய காலகட்டதில் தேவை படுகிறது.

எங்களோடு இணைய !

Thanks for submitting!

  • Instagram
  • White Facebook Icon

Meelvom-meetpom © 2025

bottom of page