top of page

"நீயா நானா" விவகாரம்.

  • Writer: Iniyaval Rajini
    Iniyaval Rajini
  • May 2, 2025
  • 4 min read


தமிழ் மக்களுக்கு எதிராக வைக்கப்படும் கண்ணிவெடி: தமிழர்கள் மீதான வன்முறை !

  • கோபிநாத்தின் கோபம் வெறும் நாடகம் மட்டுமல்ல - அது தமிழ் சமூகத்தை சிதைக்கும் ஒரு கருவி! இளைய தமிழ்ப் பெண்களின் மீது வெறுப்பை விதைக்கும் கேள்விகள் இவை!

  • 50 ஆண்டுகளாக தமிழர்கள் மீது தொடரும் உளவியல் வன்முறை இப்போது புதிய வடிவில் மீண்டும் தலைதூக்குகிறது. உணருங்கள் இந்த வஞ்சனையை!

  • ஏன் 20-25 வயது பெண்களை திரை மேடையில் நிறுத்தி, அவர்களை பொது இடத்தில் அவமானப்படுத்த வேண்டும்? அவர்களை எதிர்த்து சமூகத்தை திருப்புவதா இதன் நோக்கம்? சிந்தியுங்கள்!

  • திருமண முடிவுகளை ஒரு திரை மேடையில் எடுக்க சொல்லி அழுத்தம் கொடுப்பதின் நோக்கம் என்ன? தமிழ்ப் பெண்களின் இயல்பு, பொது மேடையில் தங்கள் தனிப்பட்ட வாழ்க்கை முடிவுகளை அறிவிப்பது அல்ல! ஆசைகளை வெளிப்படுத்துவது வேறு. வாழ்க்கை முடிவுகளை வெளிப்படுத்துவது வேறு.


கலாச்சார சிதைவுக்கான சூழ்ச்சியை அடையாளம் காணுங்கள்!

  • எம் பெண்டிரினை நோக்கி கேள்விகள் கணைகளாக தொடுக்கப்பட்டபோது, அவர்களின் மனதில் அவர்களைப் பெற்றவர்கள் தான் வந்திருப்பார்கள்! எப்படி அவர்களால் உடனடியாக பதில் சொல்ல முடியும்? இது உளவியல் ரீதியான கொடுமையல்லவா?

  • இது வெறும் பொழுதுபோக்கு நிகழ்ச்சி அல்ல - இது தமிழர்களிடையே வேண்டுமென்றே பிளவை உருவாக்கும் சதி! விழிப்படையுங்கள்!

  • கோபிநாத் தன் மகளிடம் இதே கேள்வியை பொது மேடையில் கேட்பாரா? இல்லை! அப்படியென்றால் ஏன் மற்றவர்களிடம் கேட்கிறார்? இரட்டை வேடம் ஏன்?

உங்கள் உரிமைகளை அறிந்துகொள்ளுங்கள்!

  • உங்கள் வாழ்க்கைக்கான முடிவுகள் உங்களுடையது! உங்களையும், உங்களை சார்ந்தவர்களையும் மட்டுமே சார்ந்தது! வணிகத்திற்காக உங்கள் உணர்வுகளை விலை பேசி விற்கும் ஊடகங்களுக்கு உங்கள் தனிப்பட்ட வாழ்வை வெளிப்படுத்த தேவை இல்லை. உறுதியாக சொல்லுங்கள் எங்கள் அந்தரங்கங்களை விவாதிக்க இந்த பொது தளத்திற்கு வரவில்லை என்று !

  • ஏன் இந்த மேடை விவாதம்? தமிழர்களிடையே பொறாமை எணனைத்தினை தூண்டுவதற்கு. ஊடக வெளிச்சத்தின் ஆசை காட்டி புகழ்  பெறலாம் எனும் போதைக்கு அடிமையாக்க. 

மற்றும் வீட்டில் யாரும் காது கொடுத்து கேட்காததால்! அப்படியானால் தீர்வு என்ன? மேடைக்கு போவதா அல்லது உங்களை சரி செய்வதா? பின்னதே உண்மையான தீர்வு!

  • சினிமாவையும், தொலைக்காட்சியையும் தூரம் வைக்க முடிவெடுக்கும் நாளே நமது வாழ்க்கைக்கான உண்மையான தீர்வை எட்டும் நாள்! இன்றைய தலைமுறை இதை உணர வேண்டும்!

இது வெறும் மேடைப்பேச்சு அல்ல! இது நம் வாழ்க்கை!

  • இது சாதிய பார்வை கிடையாது - இது வாழ்க்கைக்கான அடிப்படை முடிவு! ஒரு பெண் இயற்கையாகவே தன்னையும், தன் குழந்தைகளையும் பாதுகாக்க கூடிய ஆணைத் தேர்ந்தெடுக்க படைக்கப்பட்டுள்ளாள்!

  • பெரிய முடிவுகள் குறித்து ஒரு விவாத மேடையில் எப்படி எடுக்க முடியும்? ! ஒரு பெண்ணின் தயக்கத்தை வெறும் சாதி என்று முத்திரை குத்துவது அவளை அவமானப்படுத்துவதாகும்!

  • எம்  முன்னோர்; திருமணம் என்பது ஆயிரங்காலத்து பயிர் என்று கூறியுள்ளனர். அதனை ஒரு சினத்திரையினில் முடிவெடுப்பதற்க்கு எம் தமிழ்ப் பெண்டீர் அறிவற்றவர்கள்  அல்ல.! அவனின் அறிவு, தன்மை, விடாமுயற்சி, பாதுகாப்பு உணர்வு - இவைதான் ஒரு பெண்ணின் தேர்வை நிர்ணயிக்கும் காரணிகள்!

  • ஒரு பெண் ஆணை நேசிப்பதற்கு, அவள் அவனிடம் பாதுகாப்பு உணர்வை பெறுவதே தகுதி! இது எந்த சாதி, மத, இன வேறுபாடுகளையும் தாண்டிய உண்மை!

தமிழர் பாரம்பரியத்தின் வீர தன்மையை மீட்டெடுப்போம்!

  • "இளவட்டக்கல்லை" தூக்கிய வீரம் கொண்ட சமூகம் நம்முடையது! ஒரு பெண்ணை மணக்க போட்டியில் வென்ற பாரம்பரியம் கொண்ட தமிழர்கள் - இன்று மேடையில் பெண்களின் விருப்பத்தை கேள்வி கேட்கிறார்களா?

  • "Allow yourself to be challenged - சவால்களை ஏற்றுக்கொள்ளுங்கள்!" நல்ல தமிழ் குடும்பத்தினில் பிறந்த எந்த ஆண் மகனும் இன்று வரை எந்த சவால்களையும் சந்திக்கத்தான் செய்கிறார்கள். என்ன இன்றைய சூழலில் அதனை சிதைக்கும் சக்திகள் அதிகம். சுருங்கி போகாமல், மீண்டும் உங்களை ஆண்மையோடு நிரூபித்துக்கொள்ளும் மனநிலையை வளர்த்துக்கொள்ளுங்கள்! உங்களைத் தகுதிப்படுத்திக் கொள்ளுங்கள்!

  • பரிதாபத்தால் அல்ல, விருப்பத்தால் மட்டுமே உங்களை ஒரு பெண் மணக்க வேண்டும்! இதை தமிழ் ஆண்கள் புரிந்து கொண்டு, ஆண்மையோடு தன்னை தகவமைத்துக்கொள்ளவேண்டும். பெண்களும் அழகு மோகமும், சினிமா மோகமும் துறந்து, பெண்ணிற்கே உரிய பொறுப்போடு குடும்பத்தையும், சமூகத்தையும் நுண்ணிய அறிவோடு வளர்க்கவேண்டும்!

தமிழர்களுக்கான உளவியல் மீட்சி அவசியம்!

  • தமிழ் சமூகம் அவசரமாக உளவியல் மீட்சி செய்ய வேண்டும்! ஒரு வடக்கன் முதலாளியையும், ஒரு வடுக நெறியாளரையும் கொண்டு நடத்தும் நிகழ்ச்சி தானே. தமிழ்ச் சமூகத்தின் அறச்சிந்தனையையா எதிர் பார்க்க முடியும்.

  • தமிழ் ஆண்களை வெற்றி பெற ஊக்குவிப்பது பெண்களின் கடமை! உங்களையும் உங்கள் குழந்தைகளையும் குடும்பத்தினையும் அன்பாக பாதுகாக்கும் தமிழர் குடிகளில் பிறந்த ஆண்மகன்களை தேர்வு செய்து உங்கள் குடும்பத்தின் வெற்றிக்கு உறுதுணையாக இருந்திடுங்கள். வாய்ச்சொல்லில் வீரர்களை புறக்கணியுங்கள். எதிர்மறை உணர்வுகளை ஊக்குவிக்கும் இந்த ஊடக நாடகங்களை புறக்கணியுங்கள்!

  • ஆண் ஆணாகவும், பெண் பெண்ணாகவும் மீண்டும் பரிணமிக்க வேண்டும்! இயற்கைக்கு எதிரான சிந்தனைகளில் இருந்து விடுபடுங்கள்!

பெண்களின் இயல்பை அவமதிக்காதீர்!

  • ஒருவர் கொடுப்பவர், ஒருவர் பெறுபவர் - பெறுபவரின் மனநிலை கவனமாக இருப்பது இயற்கை! இதை மாற்ற முயல்வது இயற்கைக்கு எதிரானது!

  • "A woman will always be cautious - ஒரு பெண் எப்போதும் எச்சரிக்கையாக இருப்பாள்!" இந்த இயல்பை உடைக்கவே பல திட்டமிட்ட சித்தாந்தங்கள் நம் மீது திணிக்கப்படுகின்றன!

  • திருமண உறவை ஒரு மேடையில் முடிவு செய்ய முடியாது! உணர்ச்சி வசப்படாமல் நிதானமாக சிந்தித்த பெண்களை குறை சொல்வது பெரும் அநீதி!

அறியாமையின் விளிம்பில் நம் தலைமுறை

  • நம் இளைய தலைமுறை அறியாமையின் விளிம்பில் இருப்பது கண்டு கலக்கமாக உள்ளது! அவர்கள் உண்மை வாழ்க்கையை அறியாமல், திரைக்காட்சிகளில் காணும் மாயை உலகில் வாழ்கிறீர்கள்! 

  • திரையில் காட்டப்படுவதையே வாழ்க்கையாக நம்பும் சோகம்! திரையில் காட்டப்படும் எதிர்மறையான வாழ்க்கை காட்சிகளையே எதார்த்தமாக எண்ணி, தவறான முடிவுகளுக்கு வந்து விடுகிறீர்கள்!

  • நகர வாழ்க்கை பற்றிய புரிதல் மிகவும் குறைவாகவே உள்ளது! அவர்கள் அறிவது திரையில் காட்டப்படும் "சினிமா நகரம்" மட்டுமே! உண்மையான நகர வாழ்க்கையின் சவால்கள், போராட்டங்கள், உறவு சிக்கல்கள் பற்றி அறியாமல் இருப்பதுபோல் எண்ணம் எழுகின்றது. !

உறவுகள் பற்றிய தவறான புரிதல்

  • எதிர்மறையான மாமியார்த்தனம் நகரத்திலும் உள்ளது என்பது உண்மை! ஆனால் அதுவே நகர வாழ்க்கையின் முழு உண்மையும் அல்ல! ஒவ்வொரு வீட்டிலும் நல்ல மாமியார்களும், அன்பான கணவன்-மனைவி உறவுகளும் இருக்கின்றன!

  • வெள்ளித்திரை படங்களிலும், சின்னத்திரை தொடர்களிலும் காட்டப்படும் மாமியார்-மருமகள் மோதல்களை வைத்து, நகர வாழ்க்கையை முடிவு செய்வது தவறு! ஒவ்வொரு குடும்பமும் வித்தியாசமானது, ஒவ்வொரு உறவும் தனித்துவமானது என்பதை புரிந்துகொள்ள வேண்டும்!

  • உறவில் மகிழ்ச்சியை தேடுவதை விட்டு, பிரிவில் நாட்டம் கொள்வது நம் சமூகத்தை சிதைக்கிறது! "நீயா நானா" போன்ற நிகழ்ச்சிகள் பிரிவையும், பகைமையையும் ஊக்குவிக்கின்றன! தமிழருக்கு எதிரான இந்த உளவியல் போரை அடையாளம் காணுங்கள்!

உண்மையான வாழ்க்கைக்கு திரும்புவோம்

  • திரையில் காணும் உறவுகள் கற்பனையானவை! நகரத்தில் வாழும் பல குடும்பங்கள் அன்பு, ஒற்றுமை, புரிந்துணர்வு கொண்டவை! அது பற்றி ஏன் பேசுவதில்லை?

  • பிரச்சனைகள் எங்கும் உள்ளன, அதர்க்கான தீர்வுகளும் உள்ளன! திருமண உறவில் பிரச்சனைகள் வரும்போது, பிரிவு ஒன்றே தீர்வு அல்ல! கலந்துரையாடல், புரிந்துகொள்ளுதல், விட்டுக்கொடுத்தல் போன்ற தமிழர் பண்பாட்டு நெறிகளை மீண்டும் பின்பற்றுவோம்!

  • உறவில் மகிழ்ச்சியை தேடுவதே தமிழர் பாரம்பரியம்! "கற்புடைய பெண்டிரும் கணவனும் போற்றும் உறவே வாழ்க்கை" என்ற தமிழ் மரபை மீண்டும் எழுச்சியுறச் செய்யுங்கள்!


உண்மையான பிரச்சனைகளை அடையாளம் காணுங்கள்!

  • எங்கள் தலைமுறை செய்த சொதப்பல்களை இன்றைய தலைமுறை திருத்திக்கொண்டிருக்கிறது! அதைப் பாராட்டாமல் குறை சொல்வது ஏன்?

  • போதை பொருட்கள் ஒழிப்பு இன்று மிக அவசியமான பிரச்சனை! இதை விட்டுவிட்டு, சாதி என்ற பெயரில் இளம் பெண்களை கேள்வி கேட்பது ஏன்?

  • சாதிய படிநிலை தகர்க்க கடுமையான சட்டங்களே தீர்வு! இதற்காக அரசை வற்புறுத்த வேண்டிய ஊடகவியலாளர்கள், மாறாக இளம் பெண்களை குறி வைக்கிறார்கள்!

இந்த வலையில் விழாதீர்கள்!

  • எங்கள் இளைய தலைமுறையை கேவலமாக சித்தரிக்கும் இந்த சதியை ஒருபோதும் ஏற்க முடியாது! தமிழர்களாகிய நாங்கள் இதை அனுமதிக்க மாட்டோம்!

  • உளவியல் நெருக்கடி கொடுத்து, வடுக சித்தாந்தத்தை நிறுவும் முயற்சி இது! எச்சரிக்கையாக இருங்கள் தமிழ் மக்களே!

  • நமது தனிப்பட்ட முடிவுகளை பொது மேடைகளில் விவாதிக்க அனுமதிக்காதீர்கள்! இது தமிழ் சமூகத்தை பிளவுபடுத்தும் சூழ்ச்சி!

  • உங்கள் குடும்ப உறவுகளை வலுப்படுத்துங்கள்! தொலைக்காட்சி நிகழ்ச்சிகளைவிட, உங்கள் பெற்றோர், உடன்பிறப்புகள், குழந்தைகளுடன் உரையாடல் முக்கியம்! திரைக்கவர்ச்சியினில் வீழந்து விடாதீர்கள்!

  • தமிழர்களின் ஒற்றுமையை காப்போம்! இனிவரும் தலைமுறையை காப்போம்! இந்த ஊடக சதிகளை புறக்கணிப்போம்! 

உளவியல் சதியை முறியடிப்போம்!

  • தமிழ் குடும்ப அமைப்பை சிதைக்கும் இந்த ஊடக சூழ்ச்சியை முறியடிப்போம்! நம் வீடுகளில் சரியான கலந்துரையாடல்களை ஊக்குவிப்போம்!

  • தமிழர் வாழ்வியல் சவால்களை சமாளிக்க, குடும்ப உறுப்பினர்கள் ஒருவருக்கொருவர் உதவி செய்ய கற்றுக்கொள்வோம்! "நான்" என்ற சிந்தனையை விட "நாம்" என்ற உணர்வு முக்கியம்!

  • தமிழரின் பாரம்பரிய குடும்ப மதிப்புகளை இளம் தலைமுறைக்கு கற்றுத்தருவோம்! முன்னோர்கள் கற்றுத்தந்த வாழ்க்கை நெறிகளே இன்றைய சிக்கல்களுக்கும் தீர்வாக அமையும்!

  • தமிழ் குடும்ப அமைப்பின் வலிமையை மறுபடியும் உருவாக்குவோம்! பிரச்சனைகளில் இருந்து ஓடுவதற்கு பதிலாக, அவற்றை எதிர்கொள்ளும் தைரியத்தை வளர்ப்போம்!

  • திருமணம் என்பது இரு உள்ளங்களின் இணைப்பு என்பதை புரிந்து கொள்வோம் ! பொறுமை, விட்டுக்கொடுத்தல், புரிந்துணர்வு ஆகியவற்றால் மட்டுமே இந்த உறவு நீடிக்கும் என்பதை புரிய வைப்போம்!

  • உங்கள் குழந்தைகளிடம் நகர வாழ்க்கையின் உண்மையை பகிருங்கள்! அவர்கள் திரையில் காணும் மாயை உலகம் உண்மை அல்ல என்பதை தெளிவுபடுத்துங்கள்!

  • தமிழ் சமூகத்தின் எதிர்காலம் நம் கைகளில்! நம் இளைய தலைமுறைக்கு சரியான வழிகாட்டுதல் அளிப்போம்! தமிழரின் நல்ல பண்புகளை காப்போம், வளர்ப்போம்!


மீள்வோம்! மீட்போம்! 


 
 
 

Comments


எங்களோடு இணைய !

Thanks for submitting!

  • Instagram
  • White Facebook Icon

Meelvom-meetpom © 2025

bottom of page