top of page
demonstration   1.jpg

பொது நலம்

இருக்கும் சிக்கல்கள்

  1. போதை பொருட்கள், கள்ளச்சாராயம் அதிகரிப்பு

  2. ரேசன் கடையில் அத்தியவசமான எண்ணெய்,பருப்பு போன்றவற்ற பொருட்கள் பற்றாக்குறை 

  3. அரசு மருத்துவமனைகளில் தவறான சிகிச்சையால் உயிர் இழப்பு, அரசு மருத்துவமனை சுகாதாரம் மேம்படுத்தல்

  4. ஒரு கையில் 1000ரூ உரிமை தொகை, மறு கையில் சொத்து வரிகள், மின்சாரக் கட்டணம் , அன்றாட பொருட்களின் விலைவாசி அதிகரிப்பு

  5. குழந்தைகள் உபகரணங்களில் ஜிஎஸ்டி வரி விலக்கு இல்லை

2021-25 
தமிழ்நாடு பிரச்சனைகளின் பட்டியல் 

  1. மரக்காணம் 10 கள்ளச்சாராய சாவில் (16-மே-23) பாடம் கற்றுக் கொள்ளாமல், அரசு அலட்சியத்தால் கள்ளக்குறிச்சியில் சுமார் 65 கள்ளச்சாராய உயிரிழப்பு (18-சூன்-24), மேலும் உயிரிழப்புக்கு 10 லட்சம் வழங்கி கள்ளச்சாராயத்தை ஊக்குவித்தல்

  2. ரேசன் கடைகளில் பருப்பு மற்றும் பாமாயில் தட்டுப்பாட்டால் பொதுமக்கள் கடுமையாகப் பாதிக்கப்பட்டுள்ளனர், அடுத்த மாதம் (சூலை-24) பருப்பு வழங்கப்படும் என தமிழக அரசு கூறினாலும் கடந்த மாதங்களைப் (சூன் -24) போல இந்தமாதமும் (சூலை-24) துவரம் பருப்பு வழங்கப்படவில்லை

  3. மருத்துவ அலட்சியத்தால் கால்பந்து வீராங்கனை 17 வயது பிரியா மரணம். (15-நவ-22)

  4. ஈரோடு தாளவாடி அரசு மருத்துவமனையில் குடும்பக் கட்டுப்பாட்டிற்கு பதிலாக இருதய குழாயில் அறுவை சிகிச்சை, அப்பெண் அனுப்பல்லவி(25) உயிருக்கு போராடும் நிலைமைக்கு தள்ளிய சோகம். (12-பிப்-24)

  5. மூன்றாவது முறையாக 4.8% மின் கட்டணம் உயர்வு (16-சூலை-24), இதற்கு முன்பு செப்-22ல் 30%, சூலை-23ல் 2.2% மின்சாரக் கட்டணம் உயர்வு

  6. 40 திமுக மற்றும் கூட்டணி எம்.பிக்கள் இருந்தும் பட்ஜெட்டில் தமிழ் நாட்டிற்கு என்று நிதி ஒதுக்கீடு இல்லை. (23-சூலை-24)

  7. தமிழ் புதல்வன் என்ற பெயரில் பள்ளி மாணவர்களுக்கு ஆயிரம் ரூபாய் கொடுத்து, மறுமுனையில் பள்ளி பாடப்புத்தகம் விலை ஏற்றம். (12-ஆக-24)

  8. நான்கு பேர் சென்ற தமிழக மீனவர்களின் படகை இலங்கை ராணுவ போர்க்கப்பல் மோதியதால் மீனவர் மலைச்சாமி என்பவர் பலியானார் மீதம் மூவரை காணவில்லை. (1-ஆக-24)

  9. எல்லை தாண்டி மீன் பிடித்ததாக 33 ராமநாதபுரம் மீனவர்களை கைது செய்தது இலங்கை கடற்படை (9-ஆக-24)

  10. ஸ்ரீவில்லிபுத்தூர் பட்டாசு ஆலை வெடி விபத்து, இரண்டு பேர் உயிர் இழந்ததற்கு தல மூன்று லட்சம் நிவாரணம் (14-ஆக-24)

  11. தமிழகத்தில் கடந்த 3.5 ஆண்டுகளில் 3,28,970 கரு கலைப்புகள், இதில் சென்னையில் அதிகபட்சமாக 25,423 கருக்கலைப்பு செய்யப்பட்டுள்ளன, RTI மூலம் குடும்ப நல இயக்கம் தகவல் (16-ஆக-24)

  12. தமிழ்நாட்டில் உள்ள விக்கிரவாண்டி தர்மபுரி கிருஷ்ணகிரி உள்ளிட்ட 28 சங்கசாவடிகளில் சுங்க கட்டணம் வரும் செப்டம்பர் ஒன்றாம் தேதி முதல் 7% வரை உயர்த்தப்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது (26-ஆக-24)

  13. சென்னை மையப்பகுதியில் தேவையற்ற ஃபார்முலா 4 கார் ரேஸ் நடைபெற்றது (31-ஆக-24)

  14. கடந்த ஆண்டை விட இந்த ஆண்டு 26% தமிழ்நாட்டில் டெங்கு காய்ச்சல் அதிகரிப்பு (02-செப்-24)

  15. எல்லை தாண்டி மீன்பிடித்ததாக இலங்கை கடற்படையால் கைது செய்யப்பட்ட தூத்துக்குடி மாவட்ட மீனவர்கள் 12 பேருக்கு, அந்நாட்டுப் பணத்தின் மதிப்பில் தலா ஒன்றைக் கோடி ரூபாய் அபராதம் விதிக்கப்பட்டுள்ளது (04-செப்-24)

  16. திண்டுக்கல் மாவட்டத்தில் பரவும் டெங்கு காய்ச்சல் அரசு மருத்துவமனையில் 45 பேருக்கு சிகிச்சை (13-செப்-24)

  17. சென்னை மதுரவாயல் அருகே சாலை நடுவில் உடைத்துக்கொண்டு தறிக்கட்டு ஓடி அரசு பேருந்து ஆட்டோ மீது மோதியதில் ஆட்டோ ஓட்டுனர் உயிரிழந்தார் (17-செப்-24)

  18. விருதுநகர் வெம்பக்கோட்டை அருகே பட்டாசு ஆலை வெடி விபத்தில் ஒருவர் உயிரிழந்த நிலையில் மேலும் ஒருவர் படுகாயம் அடைந்தார் (19-செப்-24)

  19. சென்னை பொன்னேரியில் பிரபல தனியார் பிரியாணி கடையில் பிரியாணி சிக்கன் லெக் பீஸ் வாங்கி உட்கொண்ட பத்துக்கும் மேற்பட்டோர் உடல்நலக் குறைவு ஏற்பட்டுள்ளது அவர்களின் மூன்று பேர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளன (20-செப்-24)

  20. தமிழகத்தில் ஏழு அரசு சட்டக் கல்லூரிகளில் முதல்வர்கள் இல்லாத நிலையில் அனைத்து சட்ட கல்லூரியிலும் மூடி விடலாமே என சென்னை உயர்நீதிமன்ற மதுரை அமர்வு கருத்து தெரிவித்துள்ளது (21-செப்-24)

  21. சீர்காழி அருகே மயானத்திற்குச் செல்ல சாலை மற்றும் பாலம் இல்லாததால் வயல் வெளி வழியே இறந்தவரின் உடலை எடுத்துச் செல்லும் அவலம். சாலை அமைத்து பாலம் கட்டித்தர கிராம மக்கள் கோரிக்கை வைத்துள்ளனர் (23-செப்-24)

  22. சென்னை அடுத்த பூவிருந்தவல்லி அருகே பொழிந்த கனமழையால் குடியிருப்பு பகுதியில் குளம் போல் மழை நீர் தேங்கியுள்ளது இதனால் அப்பகுதி மக்கள் அவதி அடைந்தனர். (28-செப்-24)

  23. சென்னை மாநகராட்சியில் மீண்டும் சொத்து வரியை உயர்த்த தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது, 2022-2023ஆம் நிதி ஆண்டில் சொத்து வரியை 50 முதல் 10 50 சதவீதம் வரை உயர்த்தியது, பின்னர் ஒவ்வொரு ஆண்டும் சொத்து வரி 6 சதவீதம் உயர்த்தப்படும் என தெரிவிக்கப்பட்டிருந்தது. (28-செப்-24)

  24. தல 50,000 ரூபாய் அபதாரம் செலுத்தியதால் விடுதலை செய்யப்பட்ட நிலையில் 5 தமிழக மீனவர்கள் மொட்டை அடித்து இலங்கை அரசு தமிழக அரசுக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளதால் ராமேஸ்வரம் மீனவர்கள் ஆத்திரம் அடைந்து போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். (14-செப்-24)

  25. ஒப்பந்த தொழிலாளர்கள் என்பதால் செவிலியர்களுக்கு மகப்பேறு சலுகைகள் வழங்க முடியாது என அரசு தரப்பில் தெரிவிக்கப்பட்ட நிலையில் அதை ஏற்றுக் கொள்ள முடியாது என்று உயர் நீதிமன்றம் தீர்ப்பை வழங்கியுள்ளது. (23-அக்-24)

  26. இலங்கை கடற்படையினரால் கைது செய்யப்பட்ட இருதய நோய் மற்றும் மூளை நரம்பு பாதிக்கப்பட்ட சிகிச்சை பெற்று வரும் இரு மீனவர்களை உடனடியாக விடுதலை செய்ய வேண்டும் என மீனவர்களின் குடும்பத்தினர் கண்ணீருடன் கோரிக்கை விடுத்துள்ளனர் (24-அக்-24)

  27. தீபாவளி பண்டிகை தினத்தில் நாடு முழுவதும் மக்கள் பட்டாசுகளை வெடித்து கோலாகலமாக க் கொண்டாடி வரும் நிலையில் பட்டாசுளை உற்பத்தி செய்து வெளிச்சத்தை கொடுக்கும் பட்டாசு தொழிலாளர்களின் வாழ்க்கை மற்றும் ஊதியம் இருட்டில் தான் தொடர்கிறது (31-அக்-24)

  28. கேரளாவின் பாலக்காடு மாவட்டம் சோரனூரில் ரயில் மூதிய விபத்தில் இரண்டு பெண்கள் உட்பட 4 ரயில்வே ஒப்பந்த தொழிலாளர்கள் உயிரிழந்தனர். தமிழகத்தைச் சேர்ந்த தொழிலாளர்களின் கிராமமே சோகத்தில் மூழ்கியுள்ளது (03-நவ-24)

  29. திண்டுக்கல் மாவட்டம் நத்தம் அருகே மேம்பாலம் இல்லாததால் இறந்தவர்களின் உடலை இடுப்பளவுநீரில் சுமந்து சென்று அடக்கம் செய்ய வேண்டிய அவலம் நிலவுகிறது (03-நவ-24)

  30. செங்கல்பட்டு மாவட்டம் செய்யூர் அருகே ஆறு வயது சிறுமி டெங்கு காய்ச்சலால் உயிரிழந்தது சோகத்தை ஏற்படுத்தியுள்ளது (05-நவ-24)

  31. கடலூர் மாவட்டம் காட்டுமன்னார்கோவில் அருகே வீரசோழபுரம் கிராமத்தில் ஆபத்தான முறையில் இறந்தவர்களின் உடலை நீந்தி சென்று அடக்கம் செய்ய வேண்டிய அவல நிலை (08-நவ-24)

  32. 100 நாள் வேலை திட்டத்தில் பெரம்பலூர் கிராம மக்களுக்கு கடந்த இரு மாதங்களாக சம்பளம் வழங்கவில்லை என்ற குற்றச்சாட்டு (08-நவ-24)

  33. மதுரை விமான நிலையத்துக்கு நிலம் கொடுத்த கிராம மக்கள் திடீர் போராட்டம், மதுரை விமான நிலையம் விரிவாக்க பணிகளுக்கு அப்பகுதியில் 610 ஏக்கர் நிலம் மாவட்ட நிர்வாகத்தால் கையெடுக்கப்பட்டது இதில் சின்ன உடைப்பு கிராமத்தில் உள்ள நூற்றுக்கு மேற்பட்ட வீடுகளுடன் விவசாய நிலங்களும் சேர்த்து 300 ஏக்கர் நிலத்தை கைய படுத்தினார் (17-நவ-24)

  34. திருவண்ணாமலையில் பெய்த கனமழை காரணமாக பாறை உருண்டு மண் சரிவு விழுந்தது குழந்தை உட்பட 7 பேர் வீட்டுக்குள் இருந்து பரிதாபமாக சிக்கி உயிரிழந்தனர் (02-டிச-24)

  35. எல்லைத்தாண்டி மீன் பிடித்ததாக கூறி 17 தமிழக மீனவர்களை இலங்கை கடற்படையினர் கைது செய்துள்ளனர் (24-டிச-24)

  36. 1972 முதல் 2003 வர இடைப்பட்ட காலத்தில் வழங்கப்பட்ட ஆதிதிராவிட மாணவர்களின் கல்விக் கடனை தள்ளுபடி செய்வதாக தமிழக அரசு அறிவித்துள்ளது. தமிழக அரசு ஆளுங்கட்சியான திமுக அரசு தங்களுடைய தேர்தல் வாக்குறுதலில் ஒன்றாக மாணவர்கள் கல்வி கடன் தள்ளுபடி செய்யப்படும் என்பதை முக்கியமானதாக அறிவித்திருந்தது அது சார்ந்த எந்த அறிவிப்பு வெளியாகாமல் இருந்த நிலையில் தற்போது ஆதிதிராவிட மாணவர்களின் கடன் தள்ளுபடி செய்ய ப்படுவதாக திமுக தலைவர் அரசு அறிவித்துள்ளது (03-பிப்-25)

  37. இராமேஸ்வரம் மீனவர்கள் 16 பேர் அபராதத்துடன் விடுதலை, மூவருக்கும் தலா ரூ60.5 லட்சம் அபராதம் விதித்துள்ள இலங்கை நீதிமன்றம் படகுகள் அரசுடைமையாக்கி உதவித்துள்ளது (05-பிப்-25)

  38. ராமநாதபுரம் எல்லை தாண்டி மீன் பிடித்ததாக இரண்டு படகுகளுடன் 14 தமிழக மீனவர்கள் இலங்கை கடற்படை கைது செய்துள்ளது (09-பிப்-25)

  39. நாய்க்கடிகள் அதிகம் பதிவாகும் மாநிலத்தில் இரண்டாம் இடம் பிடித்த தமிழகம் குறிப்பாக தமிழ்நாட்டில் டிராபிஸ் நோய் மூலம் ஏற்படும் உயிரிழப்புகள் அதிகரித்து வருவதாக குரல்கள் எழுந்துள்ளது (11-பிப்-25)

  40. தமிழ்நாட்டில் கடந்த ஐந்து ஆண்டுகளில் ரயில் பயணத்தில் 131 பேர் உயிரிழப்பு என்ற தகவல் வெளியாகி உள்ளது, இதே போல் உடைமைகளை இழந்தோர் எண்ணிக்கை 400 தாண்டி நிற்கிறது (11-பிப்-25)

  41. பள்ளி மாணவர்களுக்கு பொதுத்தேர்வில் மற்றும் இறுதி தேர்வுகள் விரைவில் தொடங்கியுள்ள நிலையில் திருவாரூர் மாவட்டத்தில் 500க்கும் மேற்பட்ட மாணவர்கள் ஆதியின் பழங்குடியினர் சான்றிதழ் வழங்க கோரி 17 நாளாக பள்ளி புறக்கணிப்பு போராட்டத்தில் ஈடுபட்டனர் (12-பிப்-25)

  42. திருச்செந்தூர் அருகே அரசு விடுதியில் மாணவர்கள் சாப்பிட்ட உணவில் பல்லி கிடந்ததால் 8 மாணவர்கள் வாந்தி மயக்கம் அடைந்த நிலையில் திருச்செந்தூர் அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர் (14-பிப்-25)

  43. ஈரோடு அருகே விவசாய ஆட்டுப்பட்டியில் புகுந்த நாய்கள் பத்து ஆடுகளை கடித்து இறந்த நிலையில் மக்களின் கவனத்திற்கு எடுத்துச் செல்ல ஆடுகளை வாகனத்தில் ஏற்றி காவல் நிலையத்திற்கு சென்றவர்களை கண்டித்த காவல்துறையினர் (17-பிப்-25)

  44. எல்லை தாண்டி மீன்பிடித்ததாக ஒரே இரவில் ஐந்து விசைப்படகுகளுடன் 32 ராமேஸ்வரம் மீனவர்களை இலங்கை கடற்படையினர் கைது செய்துள்ளனர் (23-பிப்-25)

  45. வாணியம்பாடி அடுத்த அலங்காயம் ஒன்றியத்திற்கு உட்பட்ட மலை கிராமமான நெக்னாமலை மலை கிராமத்தை சேர்ந்தவர் கோவிந்தன் உடல் நலக்குறைவால் 7 கிலோமீட்டர் தூரம் மலைச்சாலையில் நடந்தே வந்து வாணியம்பாடியில் உள்ள தனியார் மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக சென்ற போது மருத்துவமனை வாசலிலே மயங்கி விழுந்து உயிரிழந்துள்ளார், இதனை அடுத்து இறந்தவரின் உடலை நள்ளிரவில் டார்ச் லைட் அடித்தும் தீபந்தம் கொளுத்தியும் 7 கிலோமீட்டர் தூரம் கார்டு முரடான சாலையில் தோழி கட்டி தூக்கி சென்ற கிராம மக்கள், ஆட்சிகள் மாறினாலும் தங்களது அவலம் மாறவில்லை என மலை கிராம மக்கள் வேதனை (24-பிப்-25)

  46. விழுப்புரம் மாவட்டம் திண்டிவனம் அருகே நீட் தேர்வுக்கு தயாராகி வந்த மாணவி விபரீத முடிவை எடுத்துள்ளது, சோகத்தை ஏற்படுத்தியுள்ளது (02-மார்-25)

  47. பழுதடைந்த பேருந்து ஓட்டுவது வழக்கமாய் வருகின்ற நிலையில், ஈரோட்டில் பயணிகளை ஏற்றி சென்ற அரசு பேருந்து திடீரென பழுது ஏற்பட்டதால் பயணிகள் உதவியுடன் பேருந்து தள்ளி ஏற்க முயற்சித்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது (07-மார்-25)

  48. கோவில்பட்டி அரசு தலைமை மருத்துவமனையில் குழந்தை பிறந்த பத்தாவது நாளில் கழிப்பறையில் வழுக்கி விழுந்த பெண் பரிதாபமாக உயர்ந்த சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது உயிரிழந்த பெண் வழுக்கி விழுந்து இருந்தாரா அல்லது உடல் ரீதியாக பாதிப்பை ஏற்பட்டு மயங்கி இருந்தார் என்பது குறித்து உடற்கூறு ஆய்வு பின்னால் தான் தெரிய வரும் என்று மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர் (09-மார்-25)

  49. தமிழக ரேஷன் கடைகளில் அரிசி காடு தரார்களுக்கு வழங்கப்பட்ட கோதுமையின் அளவு 2 கிலோவாக குறைக்கப்பட்டுள்ளதாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது (09-மார்-25)

  50. ஆன்லைன் வர்த்தகம் அதிகரிப்பு மின் கட்டணம் அடைய உயர்வு போன்ற காரணங்களால் மளிகைத்துறை நசிந்து வருவதாக சிறு வியாபாரிகள் வேதனை தெரிவிக்கின்றனர் சென்னையில் மட்டும் சுமார் 20% மளிகை கடைகள் கடந்த ஐந்தாண்டு மூலம் பட்டுள்ளதாக தெரிவிக்கின்றனர் (11-மார்-25)

  51. தேனி ஆண்டிபட்டி அருகே மலை கிராமத்தில் சுடுகாட்டிற்கு செல்ல பாதை கேட்டு குழந்தைகளை பள்ளிக்கு அனுப்பாமல் கிராம மக்கள் நூதன போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர் (11-மார்-25)

  52. திண்டுக்கல்லில் இருந்து குமுளி வரை நான்கு வழிச்சாலை அமைக்கும் திட்டம் தொடங்கப்பட்ட நிலையில் தற்போது திண்டுக்கல்லில் இருந்து வத்தலகுண்டு வரை இருவழிச் சாலை மட்டுமே அமைக்கப்பட்டுள்ளது இந்த நிலையில், நான்கு வழிச்சாலை பணிகள் எதுவும் நடைபெறாமல் சுங்கச்சாவடி திறக்கப்பட்டதால் பொதுமக்கள் ஆத்திரம். சுங்கச்சாவடி அடித்து நொறுக்கி பொதுமக்கள் முற்றை விட்டு போராட்டத்தில் ஈடுபட்டதால் பரபரப்பு ஏற்பட்டது (12-மார்-25)

  53. பிரபல youtuber சவுக்கு சங்கர் சென்னையில் வீடு உள்ளது இவரது வீட்டின் பின்பக்கம் கதவை உடைத்த மர்ம நபர்கள் சிலர் தூய்மை பணியாளரை சவுக்கு சங்கர் அவதூறு ஆக பேசியதாக கண்டனம் தெரிவித்து கழிவுநீர் போன்றவற்றை வீடும் அழுவதும் ஊற்றினார்கள் அவரது வீட்டையும் சுவரை ஆடியதால் பரபரப்பு ஏற்பட்டது இதனால் பலரும் கண்டனம் தெரிவித்துள்ளனர் (24-மார்-25)

  54. வாணியம்பாடி அருகே நிற்காமல் சென்ற அரசு பேருந்தில் 12 வகுப்பு மாணவி ஓடிச்சென்று ஏறிய விவகாரம் தொடர்பாக பேருந்து ஓட்டுனரிடம் உரிய விசாரணை கொள்ளப்படும் என ஆம்பூர் பணிமனைக கிளை மேலாளர் தெரிவித்தார் (25-மார்-25)

  55. சென்னைவாசிகள் அன்றாட போக்குவரத்து பேருந்துகளை பயன்படுத்துவது கடந்த 15 ஆண்டுகளில் 8% குறைந்துள்ளதாகவும், இருசக்கர வாகன பயன்பாடு 12.5% அதிகரித்திருப்பதாகவும் அண்மையில் வெளியான ஆய்வு முடிவுகள் தெரிவிக்கின்றன (10-ஏப்-25)

  56. சென்னை சைதாப்பேட்டையில் வீட்டின் வெளியே விளையாடிக் கொண்டிருந்த ஐந்து வயது சிறுமியை வளர்ப்பு நாய் கடித்து குதிரிய சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது (15-ஏப்-25)

  57. நாகை நிவாரண்யம் அருகே நடுக்கடலில் மீன் பிடித்துக் கொண்டிருந்த மீனவர்களை தாக்கி gps கருவி பேட்டரி செல்போன் உள்ளிட்ட மீன் பிடி சாதனங்களை பறித்துச் சென்று கடற்கொள்ளையர்கள் (17-ஏப்-25)

  58. சிதம்பரத்தில் பிரபல பிரியாணி கடை பிரியாணிகள் கரப்பான் பூச்சி இருந்ததால் ஊழியர்களிடம் வாக்குவாதத்தில் ஈடுபட்ட வாடிக்கையாளர் (28-ஏப்-25)

  59. நாகை மீனவர்கள் மீது அடுத்தடுத்து கொலை வெறி தாக்குதல் நடத்திய இலங்கை கடற்கொள்ளையர்கள், 19 மீனவர்களை சிகிச்சைக்காக அனைவரும் மதிக்கப்பட்டுள்ள நிலையில் படுகாயம் நடந்த மீனவர்கள் கரை திரும்ப முடியாமல் தவிப்பதாக தகவல் வெளியாகி உள்ளது (03-மே-25)

  60. செங்கல்பட்டு மாவட்டம் மேல்மருவத்தூர் அருகே ஆகழி பகுதி சேர்ந்த ரமேஷ் குமார் என்பவரது மகள் கயல்விழி இவர் நடப்பாண்டு பிளஸ் டூ தேர்வு எழுதித்தேர் முடிவுக்காக காத்திருக்கும் நிலையில் நேற்று இரவு விண்ணப்பித்திருக்கிறார். இதனை அடித்து அடுத்த நாள் நீட் தேர்வு எழுத தாம்பரம் செல்ல வேண்டும் என்பது தாயார் அதிகாலை 4 மணிக்கு மகளை எழுப்புவதற்காக மானே வேலைக்கு சென்றார் அப்போது மனைவி தூக்கிட்டு தற்கொலை செய்திருப்பதை கண்டு அதிர்ச்சி அடைந்தார். உடலை பிரேத பரிசோதனைக்கு மதுராந்தகம் அரச மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர் மன உளைச்சல் காரணமாக அல்லது தேர்வு வைத்து தற்கொலை செய்து கொண்டாரா என்ன மேல்மருவத்தூர் போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர் (05-மே-25)

எங்களோடு இணைய !

Thanks for submitting!

  • Instagram
  • White Facebook Icon

Meelvom-meetpom © 2025

bottom of page